பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, November 8, 2009

மார்க்கெட் மல்லுக்கட்டு!

சென்னையில் உள்ள நாடார்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டி ருக்கிறது பெரம்பூர் மார்க்கெட் விவகாரம். ஒரு மாதத்திற்கு 2 கோடியே 40 லட்ச ரூபாய் டேர்ன்ஓவர் ஆகக்கூடிய இந்த மார்க்கெட் யாருக்குச் சொந்தம் என்பதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையனும் அவரது உடன்பிறந்த தம்பி பத்மநாபனும் மல்லுக்கட்டுவதுதான் மார்க்கெட் விவகாரத்தின் மையப்புள்ளி.வடசென்னையில் மிகப் பிரபலமானது பெரம்பூர் மார்க் கெட். இந்த மார்க்கெட்டிற்குள் ஒருவர் நுழைந்துவிட்டால், குடும்பத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கி வந்துவிடலாம் என்பதால், வடசென்னை மக்களிடையே இந்த மார்க்கெட ஏக பிரசித்திப் பெற்றுள்ளது. இதனால், எப் போதுமே மக்கள் கூட்டம் இங்கு அதிகரித்தபடியே இருக்கும்.வெள்ளையன், அவரது தம்பி பத்மநாபன் மற்றும் 8 பேர் என 10 பேர் பங்குதாரர்களாக (ஷேர்ஹோல்டர்ஸ்) சேர்ந்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த மார்க்கெட். ஆனால் இது தனக்கு மட்டுமே சொந்தம் என்று கூறி மார்க்கெட்டை முழுமையாக அபகரிக்க பத்மநாபன் முயற்சிப்பதாகவும் சுமார் 15 கோடி ரூபாய் மார்க்கெட் வியாபாரத்தில் பத்மநாபன் மோசடி செய்திருப்பதாகவும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்திருக்கிறார் வெள்ளை யன். இதனால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களிலும் நாடார்களிடமும் பரபரப்பாகியிருக்கிறது இந்த விவகாரம்.இதுபற்றி வெள்ளையனிடம் கேட்டபோது... ""நான், எனது தம்பி பத்மநாபன், மணி, செந்தில் குமார், டைமன் ராஜா, ஆதிமூர்த்தி, ரவி, ஜெய்சங்கர், தீபன் தினகரன், கார்த்தீபன் ஆகிய 10 பேரும் பங்குதாரர்களாக இணைந்து குமரேசன் என்பவரிடமிருந்து 3 கிரவுண்ட் காலி இடத்தை வாடகைக்கு வாங்கி இந்த மார்க்கெட்டை உருவாக்கினோம். இதற்கான பொறுப்பாளராக பங்குதாரர்களில் ஒருவரும் எனது தம்பியுமான பத்மநாபனை நியமித்தோம். இந்த மார்க்கெட்டில் தினமும் 8 லட்ச ரூபாய் டேர்ன் ஓவர் ஆகும். மாசம் 2 கோடியே 40 லட்ச ரூபாய். இப்படிப்பட்ட சூழலில்தான் சமீபகால மாக எனது தம்பி பத்மநாபன் ரகசியமாக சொத்துக்களை (நிலம், வீடு, நகைகள்) வாங்கிக் குவிப்பதாக பங்குதாரர்கள் அனைவருக்கும் தகவல் கிடைத்தது. அதன்படி, கணக்கு வழக்குகளை சரிபார்த்தபோது... 15 கோடி ரூபாய் சார்ட்டேஜ். பத்மநாபனிடம் இதுபற்றி கேட்டபோது... முறையாகப் பதில் சொல்லவில்லை. பங்குதாரர்கள் பலரும் ரத்தம் சிந்தி உழைத்த பணம் இது.இதற்கிடையே இந்த மோசடியை பங்கு தாரர்கள் கண்டுபிடித்துவிட்டதால், மார்க்கெட் டையே தனதாக்கிக்கொள்ள முயற்சித்த எனது தம்பி பத்மநாபன், மார்க்கெட் அமைந்துள்ள நிலத்தின் உரிமை யாளரான குமரேசனை சந்தித்துப் பேசி... தனக்கும் அவருக்குமான ஒரு வாடகை ஒப்பந்தத்தை போட் டுக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஒப்பந் தத்தை துவக்கத்தில் நாங்கள் ஏதும் போட்டுக் கொள்ளாததை நயவஞ்சகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என் தம்பி. இதுபற்றி தெரிந்ததும் என் தம்பியிடம் நான் விளக்கம் கேட்க... அண்ணன் என்றுகூட பாராமல் துப் பாக்கியை எடுத்து "சுட்டுப் பொசுக்கிடுவேன். பேசாமல் போயிடு' என்று மிரட்டினார். இதனைத் தொடர்ந்து பங்குதாரர்களும் விளக்கம் கேட்க, அவர்களையும் மிரட்டியுள்ளார். இதன் பிறகுதான், "இனி சும்மா இருக்கக்கூடாது' என்று முடிவு செய்து முறைப்படி போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தேன். மோசடி பேர்வழியான பத்மநாப னிடமிருந்து மார்க்கெட்டை மீட்காமல் நான் ஓயப்போவதில்லை'' என்கிறார் மிக காட்டமாக.பெரம்பூர் மார்க்கெட்டின் பங்குதாரர்களிடம் விசாரித்தபோது, ""ஆளுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் போட்டு 12 லட் சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்த மார்க் கெட்டை உருவாக் கினோம். இதில் பத்ம நாபன் தனது ஷேரை தரவில்லை. தம்பிக்காக வெள்ளையன்தான் அந்தத் தொகையைக் கட்டினார். மார்க்கெட் நன்றாக வளர்ச்சியடைந்த நிலையில், ஒவ்வொருவருக்கும் சுமார் 2 லட்ச ரூபாய் ஷேர் கிடைத்தது. ஆனால், ஷேரின் முழுத் தொகையையும் வாங்கிக்கொள்ள வேண்டாம், மாதம் 10 அல்லது 15 ஆயிரம் மட்டுமே எடுத்துக் கொள்வோம். மீதித்தொகை அப்படியே பங்குதாரர் களின் பெயரில் இருக்கும். அந்தத் தொகையை வைத்து நிலங்கள், வீடுகள் என சொத்துக்களை வாங்கிக் கொள்வோம்'' என முடிவு எடுக்கப்பட்டது. இதனை பொறுப்பாளர் என்கிற முறையில் பத்மநாபனே கவனித்துக்கொண்டார். இந்தச் சூழலில், பத்மநாபன் தன்னிச்சையாக நிறைய சொத்துக்களை வாங்குவதாக எங்களுக்கு தகவல் கிடைத்து, கணக்கு வழக்குகளை சரிபார்த்தபோது தான்... 15 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதை கண்டுபிடித்தோம். இதுபற்றி அவரிடம் கேட்ட போது... "தொலைச்சிடுவேன்'னு மிரட்டுகிறார். பயமாக இருக்கிறது. தலைவர் வெள்ளையன் எங்கள் பக்கம் இருப்பதால்... கொஞ்சம் நிம்மதி. ஆனாலும் என்னாகும் என்றே தெரியவில்லை'' என்கின்றனர்.இந்த விவகாரம் குறித்து செம்பியம் காவல்நிலையத்தில் முதலில் புகார் செய்யப்பட, இரு தரப்பையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்துள்ளார் இன்ஸ்பெக்டர். இருதரப்பிலும் வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் ஸ்டேஷனில் திரள... ஜே... ஜே... என்று இருந்தது ஸ்டேஷன். வழக்கறிஞர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டார் இன்ஸ்பெக்டர். அப்போது நடந்த பஞ்சாயத்தில் வெள்ளையனுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.பங்குதாரர்களுக்காக ஸ்டேஷனுக்குச் சென்ற வழக்கறிஞர் சிவாவிடம் கேட்டபோது... ""செம்பியம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர், பத்மநாபனின் பார்ட்னர் மாதிரியே நடந்துகொண்டார். இன்ஸ்பெக் டரின் கட்டப்பஞ்சாயத்துக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு போட்டுள்ளோம்'' என்கிறார் அட்வகேட் சிவா. இதுபற்றி வெள்ளையனின் தம்பி பத்மநாபனிடம் கேட்டபோது, ""அவசர வேலையாக அலைந்துகொண்டிருக்கிறேன். நாளைக்கு பேசு வோமே, நாளைக்குப் பேசுவோமே'' என்றே தொடர்ந்து பதில் தருகிறார் பத்மநாபன்.