தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிற சங்கதிதான் அது. ஒரே கால கட்டத்தில் எத்தனை ஹீரோக்கள் ஃபீல்டில் இருந்தாலும் இரண்டு பேர் மட்டுமே சினிமா வின் அடையாள நட்சத்திரங்களாக இருப்பார் கள். பெரும்பான்மை ரசிகர்கள் அந்த இரு நட் சத்திரங்களின் ரசிகர்களாக இருப்பார்கள். எம்.கே.தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா என ரசிகர்கள் பிரிந்து கிடந்தார்கள். பாகவதர் மென்மையான கதைகளில் நடித்து வந்தார். சின்னப்பா வீரதீர கதைகளில் நடித்து வந்தார். அடுத்தபடியாக எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலம். வாள்வீச்சு வீரன் என பெயர் பெற்றவர் எம்.ஜி.ஆர். ஒரு கட்டத்தில் அரசர்கால கதைப்படங்கள் ஓய்ந்து முழுக்க சமூகப் படங்கள் உருவாகத் தொடங்கியிருந்தது. அப்போது ஒரு கல்யாண நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சந்தித்துக் கொண்டார்கள். ""என்னண்ணே.... இனிமே உங்க கத்திச் சண் டைக்கெல்லாம் வேலை இல்லாமப் போச்சே என்ன செய்யப் போறீங்க?' என சிவாஜி கேட்க... "நானும் சமூகப் படங்களில் நடிக்க முடிவு செஞ்சிருக் கேன்'’என எம்ஜிஆர் சொன்னார். "அதெல்லாம் உங்களுக்கு சரிப்பட்டு வராதுண்ணே'’என சிவாஜி சொல்ல... விழாவுக்கு வந்த வி.ஐ.பி.கள் பலரிடமும் "பாருங்க கணேசு தம்பி இப்புடி சொல் லீருச்சே' என ஆதங்கப்பட்டார் எம்ஜிஆர். ஒரு சவாலாகவே இறங்கி சமூகப் படங்களின் மூலம் மாஸ் ஹீரோவாக உயர்ந்தார் எம்ஜிஆர். குணச்சித்திர நாயகனாக வாழ்ந்து காட்டினார் சிவாஜி. இருவரும் வேறு வேறு பாதையில் பயணித்தாலும்கூட அவர்களின் அரசியல் பின் புலம் காரணமாக அவர் களின் ரசிகர்கள் கடு மையாக மோதிக் கொண்டார்கள். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து நடித்த "கூண்டுக்கிளி' படம் திரையிடும் போதெல்லாம் இருதரப்பு ரசிகர் களும் கடுமையாக மோதிக்கொள்வார்கள். 1980-களில்கூட கூண்டுக்கிளி மதுரையில் வெளி யிடப்பட்டபோது சிவாஜி ரசிகர் ஒருவர் சைக்கிள் ஸ்டாண்ட்டில் வைத்து படுகொலை செய்யப் பட்டார். அதன் பிறகுதான் ஒரு நல்லெண்ண அடிப்படையில் ‘"கூண்டுக்கிளி' படத்தை திரை யிடுவதில்லை என தியேட்டர்-விநியோகஸ்தர் தரப்பினர் முடிவெடுத்தனர்.
அடுத்த தலைமுறையில் ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் பயங்கர வன்முறையில் ஈடுபட்டார்கள். ஆரம்பகாலங்களில் இருந்தே கமல் வித்தியாசமான படங்களில் நடித்து வந்தாலும் கூட ஒரு கட்டத்தில் ரஜினி போல் கமலும் மாஸ் ஹீரோவாக முடிவு செய்தார். ஒரே நாற்காலிக்கு இருவரும் குறி வைத்ததால் இருதரப்பு ரசிகர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். இந்த ஹீரோக்களும் ஒருவரை ஒருவர் தங்கள் படங்களில் சாடிக்கொண்டனர். அதன்பின் கமல் வித்தியாசமான படைப்புகளில் கவனம் செலுத்த... மாஸ் ஹீரோ நாற்காலி ரஜினிக்கு கிடைத்தது.இப்போது விஜய்க்கும், அஜீத்துக்கும்தான் போட்டி. அஜீத் அவ்வப்போது வித்தியாசமான கெட்-அப்களில் நடித்து வந்தாலும் விஜய் போலவே மாஸ் ஹீரோ நாற்காலியைத்தான் விரும்புகிறார். அதனால் இவர்களிடையே போட்டி கடுமையாக இருக்கிறது. அவரின் ரசிகர்களும் அதனால் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்கள்.அஜீத்தும், விஜய்யும் பெரிய நட்சத்திரங்களாக உருவெடுப்பதற்கு முன் "ராஜாவின் பார்வையிலே' படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அந்தப் படத்தில் விஜய்க்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதன்பின் இருவரும் தனித்தனியே அசுர வளர்ச்சியை நோக்கி விரைந் தார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கிடையே எந்த மோதலும் கிடையாது. அஜீத்தும் பல ஹிட்களை கொடுத்த பிறகு 'அஜீத்தையும், விஜய்யையும் சேர்ந்து நடிக்க வைத்தால் என்ன? என்கிற ஐடியாவில் இறங்கியது மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம். வசந்த் இயக்கத்தில் "நேருக்கு நேர்' படம் ஆரம்பிக்கப்பட்டது! படத்திற்கும் பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் ‘கதையில் தனக்கு முக்கியத்துவம் இல்லை' என்று தெரிந்த அஜீத் படத்திலிருந்து விலகிக் கொண்டார். (அஜீத்திற்குப் பதில் சூர்யா நடித்தார்) அந்த சம்பவத்திலிருந்துதான் அஜீத்-விஜய் போட்டி தொடங்கியது. "கல்லூரி வாசல்' படத்தில் பிரசாந்த்தும் அஜீத்தும் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் மனக்கசப்பு. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற நியதிப்படி திடீரென விஜய்யும், பிரசாந்த்தும் சந்தித்து பரபரப்பு மூட்டினார்கள். இதனால் அஜீத்தை தனிமைப்படுத்துவது போல ஒரு தோற்றம் அப்போது கோலிவுட்டில் நிலவியது. அதற்கேற்ப அஜீத்தும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். பிரசாந்த்தும், அப்பாஸும் சேர்ந்து நடிக்கவிருந்த "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் கதாநாயகி விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரசாந்த் விலக... விஜய்-பிரசாந்த் கூட் டணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜீத் அந்த படத்தில் நடித்தார். இப்படி பிரசாந்த் தை நடுவில் வைத்து அஜீத்-விஜய் மோதல் கொஞ்சநாள் நடந்தது. அடுத்து விஜய் தோல்வியை தொடர்ந்து சந்தித்துவிட்டு "குஷி' படம் மூலம் எழுந்தார். அந்தப் படத் தில் ‘என்னைய மட்டுமில்ல.... என் இமேஜைக் கூட ஒன்னால ஒண்ணும் பண்ணா முடியாது' என பஞ்ச் டயலாக் பேசினார் விஜய்.
அஜீத் தன்னை "தல'யாக "தீனா' படத் தில் சொன்னார். உடனே "திருமலை' படத்தில் ‘"இங்க எவண்டா தல?' என டயலாக் பேசினார் விஜய்! இப்படி மாறி மாறி மோதிக்கொண் டார்கள். இதனால் அவரின் ரசிகர்களும் அடித்துக்கொண் டார்கள்."ஏகன் அப்படின்னா அழிக்கும் கடவுள் சிவன். ஆனா இந்த ஏகன் புரொடி யூஸரையும் சேத்து அழிச்சுட் டான்' என விஜய் தரப்பு மெஸேஜ் அனுப்புவதும், ‘"வில்லு' படம் பார்த்த குழந்தைகளுக்கு வாந்தி பேதி. படத்தை தடை செய்யச் சொல்லி மக்கள் அரசுக்கு கோரிக்கை' என அஜீத் ஆட்கள் பதில் மெஸேஜ் தர... இப்படி விஞ்ஞான வளர்ச்சியையும் தங்கள் மோதலுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இந்நிலையில்... கடந்த 5-ந் தேதி ஏவி.எம். ஸ்டுடியோவில் "அசல்' படத்தின் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த அஜீத்தும், "சுறா' படத்தின் பாடல் காட்சியில் நடித்துக் கொண்டி ருந்த விஜய்யும் காலை 11.30 மணியளவில் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள்!இந்த சந்திப்பிற்கான வாய்ப்பு இப்போது இருவருக்கும் கிடைத்தாலும் மூன்று மாதத்திற்கு முன்பி ருந்தே இவர்களை சந்திக்க வைக்க கணேஷ் எனும் தொழிலதிபர் முயற்சி எடுத்து வந்தார்! இரு வருக்கும் பொதுவான நண்பரான கணேஷ் ஒரு சமரச திட்டத்தையே தயாரித்து இருவரிடமும் மாறிமாறி பேசி வந்தார். அந்த திட்டம்?விஜய் படமும், அஜீத் படமும் ஒரே நாளில் வெளியாகிறது; அவரவர் ரசிகர்கள் படத்தை பார்க்கிறார் கள். இந்த இரண்டு படத்தில் எது நல்ல படம் என தெரிந்து கொண்ட பிறகே பொதுவான ரசிகர்கள் அந்த படத்தை மட்டும் பார்க்கிறார்கள். இதனால் ஒருவர் படம் ஹிட். மற்றவர் படம் தோல்வியடைகிறது. வருடத்துக்கு ஒருபடம் தரும் அஜீத்தும், விஜய்யும் அதை ஒரேநாளில் தராமல் பொங்கலுக்கு விஜய் படம் என்றால், சித்திரைக்கு அஜீத் படம், தீபாவளிக்கு விஜய் படம், பொங்கலுக்கு அஜீத் படம்னு வெளியிடலாம். இதனால் இருவர் படமும் தொடர்ந்து வெற்றி பெறும். இதன் மூலம் இருவரும் தங்கள் இமேஜை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும். இதுதான் அந்த நண்பரின் சமரச திட்டம்! இந்த திட்டம் குறித்து விஜய்யும், அஜீத்தும் சந்தித்து பேசிக்கொள்ள முடிவும் செய்யப்பட்டி ருந்த நிலையில் சந்திப்பிற்கான தோது இல்லாமலேயே இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு ஏவி.எம்.மில் அமைந்துவிட்டது!அஜீத் வந்து விஜய்யை சந்திப்பதா? விஜய் வந்து அஜீத்தை சந்திப்பதா? என்கிற கேள்விக்கு இடம் தராமல் விஜய் தன் செட்டிலிருந்து நடந்து செட் வாசலுக்கு வந்தார். அதற்குள் அஜீத் விஜய் யின் செட்டுக்குள் நுழைய.... . "சுறா' யூனிட்டுக்கு செம ஷாக்! விஜய் புன்னகைத்தபடி அஜீத்தை கை குலுக்கி வரவேற்றார். இருவரும் யூனிட்டில் இருந்தவர்களிடம் கேஷுவலாக பேசிவிட்டு அதன்பின் தனியே அமர்ந்தார்கள்! இருவரும் பரஸ்பரம் குடும்ப நலன் விசாரித்துக் கொண்ட னர். இருவருக்கும் பழரசம் தரப்பட்டது. அஜீத்தின் கிருதாமீசை கெட்-அப்பை விஜய் பாராட்டினார். தொடர்ந்து.... தீபாவளிக்கு தனது "வேட்டைக் காரன்' படம் வெளிவராமல் போனதன் பின்னணியையும் அதனால் தனக்கு ஏற்பட்ட மனவருத்தங்களையும் அஜீத்திடம் பகிர்ந்து கொண்டாராம் விஜய். தங்களின் பட வெளியீடு சம்பந்தமான சமரச திட்டத்தின் மீதும் ஒரு நல்ல முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. இனி தொடர்ந்து நட்புறவுடன் செயல்படுவது என்றும், இதனால் தங்களின் ரசிகர்கள் மோதிக் கொள்ளும் சூழலுக்கு இடம் தரக்கூடாது என்றும் முடிவு செய் திருக்கிறார்களாம்.ஆக... இளைய தளபதி - தல சந் திப்புதான் இப்போ தைய கோலிவுட் டின் ஹாட் டாபிக். ரசிகர்கள் மோதிக் கொண்டு ரத்தம் சிந்தா மல் இருக்க இந்த சந்திப்பு பயன்பட்டால் சரி!