பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 13, 2009

ராஜபக்சே அதிரடி:பொன்சேகாவின் உறவினர்கள் பணிநீக்கம்

இலங்கை இறுதிப் போரில் வெற்றிகரமாகச் செயல்பட்டதற்காக சரத் பொன்சேகாவுக்கு முப்படைத் தளபதி என்கிற புதிய பதவி வழங்கப்பட்டது.
போர்க்குற்றங்கள் குறித்து அவரிடம் அமெரிக்கா விசாரிக்கப் போவதாகச் செய்தி வெளியானது. இலங்கை அதிபர் ராஜபட்சவின் தம்பியும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபட்சவுக்கு எதிரான ஆதாரங்களை பொன்சேகாவிடம் அமெரிக்கா கோரியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இலங்கை திரும்பிய பொன்சேகா, அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளார். அதனால் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்திருக்கிறார்.
இந்த ராஜிநாமா ஏற்கப்பட்டதும் படைப்பிரிவுகளில் பணியாற்றும் அவரது உறவினர்கள் பதவியில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளார்கள் என்று இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.