பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, November 8, 2009

சிங்கள நாயகியுடன் சூர்யா?

பத்திரிகையாளர்களை வசைபாடி வழக்கு வம்பில் சிக்கியிருக்கும் சூர்யாவை நோக்கி அடுத்த வில்லங்கம் கிளம்பியிருக்கிறது! "சிங்களப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சூர்யா. அந்தப் படத்தி லிருந்து சூர்யா விலகாவிட்டால் அவரின் வீட்டின் முன் ஆர்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம்' என பரபரப்பை கிளப்புகிறது இந்து மக்கள் கட்சி.இது குறித்து விசாரணையில் இறங்கினோம்!இந்தோ-லங்கன் கூட்டுத் தயாரிப்பில் உருவாகவிருக்கும் சிங்களப் படம் "தேவ தாசிகள்'! இந்தப் படத்தில் சூர்யா, சிம்ரன் ஆகியோருடன் சிங்கள நட்சத்திரங்களான க்ளட்டஸ் மெண்ட்டிஸ், ரெக்ஸ் கோடி பில்லி, சண்டன் விஜேஸ்ரீ மற்றும் பிரபல சிங்கள முன்னணி நடிகை மஞ்சுளா ஆகியோரும் நடிக்கிறார் கள். இதில் சூர்யா ஜோடியாக நடிகை மஞ்சுளா நடிக்கிறார். கேமரா மற்றும் நடனம் ஆகிய வேலைகளை தமிழ் சினிமா கலைஞர்கள் செய்கிறார் கள். பொலனருவா, சிகிதியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக் கிறது. படத்தை இயக்குவது சிங்கள சினிமாவின் பிரபல இயக்குநர் சுரேஷ் குமார சிங்கே. இப்படி ஒரு அதிரடி தகவல் கோலி வுட்டைக் கலக்க... "இலங்கையில் சிங்கள அரசு தமிழர்களை கொன்று குவித்து, முகாம்களில் அடைத்து சித்ரவதை பண்ணிக் கொண்டிருக்கும் நேரத் தில் சிங்களப் படத்தில் சூர்யா நடிப்பதா?' என கோபக் குரல்களும் ஒலிக்கிறது.இந்த விஷயத்தை கையிலெடுத்து போராட தயாராகியிருக்கும் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஆ.அண்ணாத்துரையிடம் பேசினோம்.""எங்களுடைய சினிமா நண்பர்கள் மூலம் பத்து நாட்களுக்கு முன்பே சூர்யா சிங்கள படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வந்தது. உடனே நாங்கள் சூர்யா தரப்புக்கு தகவல் சொல்லியனுப்பினோம். ஆனால் ‘"சிங்களப் படத்தில் கமிட் ஆகவில்லை' என பதில் வந்தது! ஆனால் ஓரிரு மீடியாக்களில் "சூர்யா நடிப்பது உண் மைதான்' என இப்போது செய்தி வந்துள்ளது. இதையடுத்து இந்த படப்பிடிப்பிற்கு ஏற்பாடு செய்யும் மேனேஜர்களுள் ஒருவரை தொடர்பு கொண்டு பேசினார் எங்கள் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணன். சூர்யா, சிம்ரன் ஆகியோருக்கு இலங்கை செல்ல ஃப்ளைட் டிக்கெட்டெல்லாம் போட்டாச்சு! டிசம்பர் 5-ந் தேதி ஷூட்டிங் தொடங்குகிறது என்று உறுதிபடுத்தியிருக்கிறார் அந்த மேனேஜர். அதனால்தான் சூர்யாவுக்கு எதிராக போராட்ட எச்சரிக்கை விட்டிருக்கிறோம். சூர்யாவை பாலா, அமீர் போன்ற தமிழ் கலைஞர்கள் தான் சிறந்த நடிகராக்கினார்கள். இப்போது அவர் திறமையை சிங்களர்கள் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவையும், நடிகர்களையும் வாழவைப்பதே உலகம் முழுக்க இருக்கும் இலங்கை தமிழர்கள்தான். அவர்களின் உணர்வுகளுக்கு எதிராக இலங்கை தமிழர்களை கொன்று குவித்து, கருவறுப்பு செய்து கொண்டிருக்கும் சிங்களர்களோடு சூர்யா எப்படி கைகோர்க்கலாம்? உலகறிந்த ஒரு தமிழ் நடிகர் சிங்களப் படத்தில் நடிப்பதிலிருந்தே தெரியவில்லையா... சிங்களர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று' என நாடகம் போட சிங்கள அரசு முயற்சிக்கிறது. இந்த சதிக்கு சூர்யா உடந்தையாக இருக்கக் கூடாது!இந்தப் பட திட்டத்தின் பின்னணியில் சென்னையிலுள்ள இலங்கை தூதர் வடிவேலு கிருஷ்ணமூர்த்தி இருந்து கொண்டு குழப்புவதாக சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது''’என ஆவேசப்பட்டார் அண்ணாத்துரை.சினிமா வட்டாரங்களில் இது குறித்து விசாரித்தோம்.நடிகை ராதிகா நிறைய சீரியல்களை தமிழ்-சிங்களத்தில் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார் இப்போதும். சிங்கள(அப்பா)- இந்திய(அம்மா) கூட்டுத்தயாரிப்பான பூஜா இரண்டு நாட்டிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இப்போது சர்ச்சைக்கு காரணமான தேவதாசிகள் பட இயக்குநரின் முந்தைய படத்தில் சிங்கள ஹீரோ ரோஷன் ரணவா னாவுடன் நம்ம சிலந்தி மோனிகா நடித்திருக்கிறார். சிங்களப் படங்களை நமது சென்னை லேப்களில் பிரிண்ட் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நடிகர்களைப் பொறுத்தவரையில் முடிவு எடுப்பது பெரும்பாலும் அவர்களின் மேனேஜர்தான். சூர்யாவிடம் "இது இலங்கையில் தயாராகும் தமிழ்ப்படம்' என்றுகூட அவரின் மேனேஜர் தங்கதுரை சொல்லியிருக்கலாம். அதனால் சூர்யாவை குற்றம் சொல்ல முடியாது! கலைஞர்களுக்கு இன,மொழி பேதம் கிடையாது. இருப்பினும் இப்போதுள்ள சூழலில் உணர்வு ரீதியாக சிங்களப் படங்களில் தமிழ் நட்சத்திரங்கள் பங்கு பெறாமல் இருப்பது நல்லது'' என்றார்கள்.சூர்யாவிடம் இது குறித்து கேட்டோம்.""எங்களது அகரம் பவுண்டேஷன் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் குழந்தைகள் படிக்க உதவுகிறோம். திரையுலகம் சார்பில் இலங்கை தமிழருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பல போராட்டங்களிலும் கலந்து கொண்டிருக் கிறேன். தகவல்-தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள் நடத்திய இலங்கை தமிழருக்கான மனித சங்கிலி போராட்டத்தில் நானும் என் தம்பி கார்த்தியும் கலந்து கொண்டோம்! நானும் இலங்கை தமிழரின் நலத்தில் அக்கறையுள்ளவன்தான். சிங்களப் படத்தில் நடிப்பதாக வந்த செய்தி எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இப்போது ஹரி இயக்கத்தில் ‘"சிங்கம்' படத்தில் நடித்து வரு கிறேன். தொடர்ந்து ராம்கோபால் வர்மாவின் இந்திப்படம். ஏ.ஆர்.முருகதாஸ் படம் நடிக்க வுள்ளேன்! இவைதவிர வேறு கமிட்மென்ட்ஸ் ஏதும் இல்லை. சிங்களப் படத்தில் நடிப்பதாக சொல்வது உண்மையல்ல... எனக்கு அதில் விருப்பமும் இல்லை''’என்றார் சூர்யா!அதே நேரத்தில் கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகை யில் பட ரைக்டர் சுரேஷ் குமார சிங்கே, தான் இயக்கும் "தேவ தாசிகள்' படத்தில் சூர்யா- சிம்ரன் நடிப்பதாக அளித் திருக்கும் பேட்டி சூர்யா விஷயத்தில் மேலும் சர்ச் சைகளை உருவாக்கு கிறது.