பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 13, 2009

தவறுகளைத் தட்டிக் கேட்கக்கூடாதா?

-ஓங்கி ஒலிக்கும் மனித உரிமைக்குரல்
""ஒரு வருஷத்துக்கு முன்னால எங்களோட தொண்டு நிறுவனத்துக்கு மனித உரிமை இயக்கம்னு பேரு வச்சோம். பதிவும் செஞ்சோம். இன்னைக்கு வரைக்கும் அந்தப் பேருக்கு ஒரு பங்கமும் வராம செயல்படறோம். ஆனாலும், எங்களையே உறுத்துற அளவுக்கு இந்த விருதுநகர் மாவட்டத்துல கந்து வட்டிக்கு விடறவங்க, சாராய பார் நடத்துறவங்க, கட்டப் பஞ்சாயத்து பண்ணுறவங்கன்னு மனித உரிமைகளை காலடில போட்டு மிதிக்குறவங்களே இந்த அமைப்புகளை நடத் துறாங்க. இப்பல்லாம் மனித உரிமை இயக் கம்னு பேரச் சொல்லவே தயக்கமா இருக்கு''.மிகவும் நெக்குருகித்தான் பேசினார் மனித உரிமை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளரான விஜயகுமார். "மனித உரிமை கள் என்ற பெயரில் இனி தொண்டு நிறு வனங்கள் செயல்பட முடியாது' என்று அர சாங்கமே சாட்டையைச் சுழற்றியிருக்கிறதே?சாம்பிளுக்கு ஒன்றிரண்டு-மந்திரி பி.ஏ. உத்தரவு போட, கலெக்டர் பி.ஏ. பரிந்துரைக்க... கோயம்புத்தூர் சர்க்யூட் ஹவுசில் ரூம் கிடைக்கிறது அந்த டுபாக்கூர் மனித உரிமை ஆசாமிக்கு. அங்கேயே "ப்ரஸ் மீட்' வைத்து மாட்டிக் கொள்ளும் அளவுக்கு விவரம் இல்லாத அந்த நபர்தான் மனித உரிமைகளின் பெயரால் தமிழகம் முழுவதும் மரியாதைக்குரியவராக பவனி வந்திருக்கிறார்.சிவகாசியில் ஒரே டூவீலரில் மூன்று பேர் வருகிறார்கள். அந்த வண்டியை நிறுத்துகிறார் டிராஃபிக் எஸ்.ஐ. முத்தரசு. ஃபுல் மப்பில் இருந்த மூவரும் மனித உரிமை அடையாள அட்டையை எஸ்.ஐ.யின் முகத்துக்கு நேரே நீட்டிவிட்டு "பை... பை...' சொல்லியிருக்கிறார்கள்.இதுபோன்ற மனித உரிமை கலாட்டாக்கள் ஒரு புறம் நடந்தேறினா லும், உருப்படியான காரியங்களையும் சில அமைப்புகள் செய்யா மல் இல்லை. திருத்தங் கல்லில் அப்படி நடந்த ஒரு கூட்டத்தில்...""லஞ்சம் கொடுக்காம எந்த ஒரு காரியமும் நடக்காதுன்னு ஏன் நெனக்குறீங்க? உங்க மனுவை நேர்ல கொடுக்க வேண்டிய அவ சியமே இல்லை. பதிவுத் தபால்ல அனுப்பி வைங்க. ஒரு மாசம் பொறுத்திருங்க. ஒரு நடவடிக்கையும் இல்லைன்னா 10 ரூபாய் ஸ்டாம்பு ஒட்டி தகவல் உரிமைச் சட்டத்தின் துணை கொண்டு கேள்வி கேளுங்க. மக்கள் விவரமா நடக்க ஆரம்பிச்சாலே லஞ்சம் கேட்குறது தன்னால குறைஞ் சிடும்'' என்று மக்களுக்கு வகுப்பே எடுத்தார்கள்.அகில இந்திய நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் ராஜேந்திரன் நம்மிடம் ""எங்கே அநியாயம் நடந்தாலும் எங்க அமைப்பு மூலம் தட்டிக் கேட்பேன். அதனால இதுவரைக்கும் 18 வழக்குகளைச் சந்திச்சிருக்கேன். தட்டிக் கேட்டால்தானே தவறுகள் குறையும். ரேசன் கடைக்குக் கூட போயி எடையச் சரிபார்ப்போம். இந்த மாதிரி அரசு இயந்திரங்களை நாங்க கண்காணிக்குறது பிடிக்காமத்தான் எங்கள ஒடுக்க நெனக்குது அரசாங்கம். தவறான அமைப்புகளைக் கண்டறிந்து களையெடுப் பதை விட்டுவிட்டு, மொத்தத்துல மனித உரிமை அமைப்புக்களே இருக்கக் கூடாதுன்னா என்ன அர்த்தம்?'' -கண் சிவக்க கேள்வி கேட்டார்.மனித உரிமை அமைப்புக்கள் மீதான உத்தரவை மறுபரிசீலனை செய்யுமா அரசாங்கம்?