
தற்போது ஜீவா பூங்கா, என்னை ஏதோ செய்துவிட்டாய், காட்டுப்பய ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தருண்கோபிக்கும், இலங்கை தமிழ் பெண் ஜானு லிங்கேஸ்வரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகள் ஜானு இலங்கையை சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இவர்களது திருமணம் வருகிற ஜனவரி மாதம் 15ம்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறுகிறது.