பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, November 8, 2009

ஒரு லட்சம் தந்தா ஒரு கோடி!

""பணம் இருந்தா ரெடி பண் ணுங்க. நாம ஒரு லட்ச ரூபா கொடுத்தா.. குடுமியான் மலையில் இருக்கும் ஒரு ஜோசியக் கார புண்ணியவான் ஒரு கோடி ரூபாய் கொடுக்குறாராம். நானும் விவசாய நிலத்தை வித்து... பணத்தைப் புரட்டிக்கிட்டு தான் இருக்கேன்''’’-என புதுக்கோட்டை டீக்கடை ஒன்றில் தன் நண்பரிடம் விவசாயி ஒருவர் சொல்லிக்கொண்டிருக்க... அந்த நண்பரோ “""ஆமாண்ணே... இதோ பேப்பர்ல கூட விளம்பரம் போட்டிருக்கான் பாருங்க. அந்த ஜோசியர்... நம்ம நமீதா, சினேகாவையெல்லாம் அழைச்சி... பிர மாண்டமான நலத்திட்ட விழாவை இன்னைக்கு குடு மியான்மலையில் நடத்தறாராம். அங்கதான் பயணப் பட்டுக்கிட்டு இருக்கேன்''’’ என்றார் உற்சாகமாக. ஒரு லட்சத்துக்கு ஒரு கோடியா? அதை விளம்பரப்படுத்த திரைப்புள்ளி களை வைத்து விழாவா? என திகைத்துப்போன நாம்... உடனடியாக குடுமியான்மலைக்கு விரைந்தோம். வழி நெடுக விழாவிற்கான டிஜிட்டல் விளம்பரங்கள்... அலங்கார தோரணங்கள் வரவேற்றன.அண்ணா பண்ணைக்குப் போகும் வழியில் ஒரு திடலில் மிகப்பெரிய மேடையும் பந்தலும் அலங்காரமாய் அமைக்கப்பட்டிருக்க... அதன் முகப்பில் "சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் முப்பெரும் விழா' என்கிற பேனர் பளிச்சிட்டது. பந்தலுக்குள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் ஏகக்கூட்டம். விழா காலையிலேயே கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடந்துகொண்டிருக்க... மதியம் சின்னத்திரை நடிகைகளின் கிளுகிளு குத்தாட்டம் ரசிகர்களை ஜொள்விடவைத்தது. அதன் பிறகு தொடங்கியது நலத்திட்ட நிகழ்ச்சிகள்.புதுக்கோட்டை, கரூர், திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் தலா இரண்டு கிராமங்களை தேர்ந்தெடுத்து... அங்குள்ள 200 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் அறிவிக்க... கைத்தட்டல் காதைப் பிளந்தது. பயனாளிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசிய நடிகர் ராதாரவி ""2010-ல் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்தப்போவதாக கலைஞர் அறிவித்திருக் கிறார். ஆனால் அதை இப்போதே ஜோதிடர் ரவிச்சந்திரன் இங்கு நடத்திக்காட்டிவிட்டார்''’என ஏகத்துக்கும் ஐஸ்மழை பொழிந்தார்.நடிகர் சார்லியோ ""பி.யூ.சின்னப்பாவைத் திரையுலகத்துக்குத் தந்த புதுக்கோட்டை மாவட்டம்... தற்போது தயாரிப்பாளராக ரவிச் சந்திரனைக் கொடுத்திருக்கிறது''’என சிலாகித்தார். கறவை மாடுகளுக் கான பத்திரத்தை வழங்கிவிட்டு மைக் பிடித்த நடிகர் வடிவேலோ ""இப்படி தர்ம சிந்தனை படைத்தவர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது’’ என்றதோடு... ரவிச்சந்திரனை வாழ்த்தி 'தர்மம் தலைகாக்கும்.. தக்க சமயத்தில் உயிர்காக்கும்' என்ற பாடலைத் தனது பாணியில் பாடிவிட்டு உட்கார்ந்தார். நடிகை சினேகாவும் தன் பங்குக்கு... ""முதல்ல ஜோசியரை யாருன்னே எனக்குத் தெரியாது. அழைப்பிதழ் கொடுக்க வந்தப்பதான் அவரோட தாராளத்தைத் தெரிஞ்சிக்கிட்டேன். நானே அவருக்கு ஃபேனாகிவிட்டேன்''’என ஜோதிடரை நெஞ்சார வாழ்த்தினார். நமீதாதான் விழாவில் தலைகாட்டாமல் டிமிக்கிக் கொடுத்து... இளைஞர்களை ஏமாற்றிவிட்டார்.நிறைவாக மைக் பிடித்த ஜோதிடர் ரவிச்சந்திரன் ""என்னோட வளர்ச்சிக்கே காரணமா இருப்பது சினேகாதான். அவங்க படத்தைப் போட்டு ஜோசியத்தை ஆரம்பிச்சேன். அவங்களால அமோகமா வளர்ந்திருக்கேன். நாந்தான் அவங்களுக்கு ஃபேன். எனது லட்ச ரூபாய்க்கு ஒருகோடி ரூபாய்த் திட்டத்தை லோக்கல் ஆளுங்கதான் நம்பாம திட்டறாங்க. ஆனா வெளியூர்க்காரங்க என்னை ரொம்ப நம்பறாங்க. எனது இந்த சேவை எப்போதும் தொடரும்''’என்றார் சந்தோஷம் பொங்க.விழாப் பந்தலுக்குள் வலம்வந்தோம். உள்ளூர்வாசிகளோ “ரவிச்சந்திரனின் ""அப்பா சவரிமுத்து வாத்தியார் வெளியூர்ல இருந்து இங்க வந்தவர். அவர்ட்ட ஜோதிடத்தைக் கத்துக்கிட்டு ரவிச்சந்திரனும் ஏதேதோ கோல்மால் பண்ணிக்கிட்டு இருக்கார். ஒரு லட்ச ரூபாய்க்கு எப்படி ஒரு கோடி ரூபாயை அவரால் கொடுக்க முடியும்? அம்பானி யாலேயே இப்படி கொடுக்க முடியாது. இதை சிந்திக்காம பலபேர் ஏமாந்துக்கிட்டு இருக் காங்க. இந்த ஆள் பலபேரை ஏமாத்தி.. வசூல் பண்ணி... காசை யெல்லாம் நடிகைகள்ட்ட விடறதா பேசிக்கிறாங்க. போனமாதம் கூட கீர்த்தியுடன்கூடிய ஒரு மூன்றெழுத்து நடிகை அவர் வீட்டுக்கு வந்துட்டுப் போனாங்க'' என்றார்கள் எரிச்சலாய்.விழாவுக்கு வந்த வெளியூர் வாசிகள் சிலரோ ""துவரங் குறிச்சியில் பலபேர் லட்ச லட்சமா கட்டி இவர்கிட்ட கோடிக்கணக்கில் செக் வாங்கி வச்சிருக்காங்க. கரூர்லயும் ஏகப்பட்டபேர் நிலம்நீச்சை வித்து இவர்ட்ட பணம் கட்டியிருக்காங்க. இந்த விழாவைப் பார்த்து... நடிகர்கள் பாராட்டியதை நம்பி இன்னும் பலபேர் இவர்கிட்ட ஏமாறப் போறாங்க. லட்ச ரூபாய் வாங்கிக்கிட்டு கோடிரூபாய்க்கு செக்போட்டுக்கொடுக் கும் ரவிச்சந்திரன்... செக்கில் தேதியை மட்டும் குறிப்பிடமாட்டார். விரைவில் ஹவாலாப் பணம் வரப்போவுது அப்ப சொல்றேன் பேங்க்கில் போட்டு பணத்தை எடுத்துக்கங்கன்னு ஏமாத்தறார்'' என்றார்கள் ஆதங்கமாய்.இதைத்தொடர்ந்து ரவிச்சந்திர னின் சகா ஒருவரிடமே நாம் கேட்க... ""ஏகத்துக்கும் வசூலிக்கிறார். தைரியமா செக் போட்டுக்கொடுக்குறார். அவர்கூட இருக்கும் எங்களுக்குதான் பயமா இருக்கு'' என்றார் சங்கடமாய். அந்த ரவிச்சந்திர னையே சந்தித்து அவரது திட்டம் பற்றி நாம் கேட்டபோது “""எனது அறக்கட்ட ளைக்காகத்தான் பலர்ட்டயும் வசூல் பண்றேன். மத்தபடி நான் அவங்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுப்பதா வாக் குறுதி கொடுக்கவே இல்லை. போலீஸ் அதிகாரிகளே எனக்கு நண்பர்களா இருக் காங்க. நான் தப்பு செய்தா விட்டு வைப்பாங்களா?''’என்றார் அதிரடியாய்.இவர் மீதான பொதுமக்களின் சந் தேகம் குறித்து மாவட்ட எஸ்.பி. மூர்த்தி யிடம் நாம் கேட்டபோது ""இதுவரை யாரும் புகார் கொடுக்கலை. புகார் கொடுத்தா நடவடிக்கை எடுப்போம். எனினும் நாங் கள் அவரைக் கண்காணித்துக்கொண்டு தான் இருக்கிறோம்'' என்றார் அழுத்த மாய். மோசடி மன்னர்கள் ஒரு பக்கம் என்றால்... இத்தகைய மோசடி மன்னர் களுக்கு விளம்பரம் தேடித்தரும் திரைப் புள்ளிகளை என்னவென்று சொல்வது?