பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 13, 2009

சினிமா தியேட்டரில் டாக்டர்கள்!

மதியம் தாத்தா வீட்டில் பிரி யாணி விருந்து. 3 வயது யாஷிகாவுக்கு அது பெரிய விஷயமில்லை. வெளியே கிளம்புகிறோம் என்பதில்தான் சந் தோஷம். காரைக்குடியின் பிரபல லாரி அதிபர் ஜஹாங்கீர் குடும்பம் அக்டோ பர் 25 அன்று மாருதி ஆம்னியில் புறப் பட்டது. ஜஹாங்கீர், மனைவி ஜெரினா, யாஷிகா, ஜஹாங்கீரின் அண்ணன் மகள்கள் 7 வயது ஹசீனா, 5 வயது ஹாஜிரா ஆகியோர் மேலூரில் உள்ள தாத்தா வீட்டுக்குப் புறப்பட்டனர்.பயணம் தொடங்கிய 28-வது நிமிடம். நாச்சியார்புரத்தில் மாருதி ஆம்னி வேன் போய்க்கொண்டிருந்த போது மதுரையிலிருந்து மரம் ஏற்றி வந்த லாரி ஒன்று நேருக்கு நேர் மோத, ஆம்னி வேன் நொறுங்கியது. ஜஹாங் கீரும் அவரது அண்ணன் மகள்களும் ஸ்பாட்டிலேயே துடிதுடித்து இறந் தனர். ஸ்பாட்டில் உயிருக்குப் போரா டிக்கொண்டிருந்த ஜெரினாவையும் குழந்தை யாஷிகாவையும் நாச்சியார்புரம்அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஜெரினா மட்டும் இங்கே இருக்கட்டும்.. குழந்தையை மதுரைக்கு கொண்டுபோனாதான் காப்பாத்த முடியும் என நாச்சியார்புரம் மருத்துவமனையில் இருந்தவர்கள் தெரிவிக்க, 108 ஆம்புலன்ஸ் யாஷிகாவுடன் மதுரை விரைந்தது. அங்கே அரசு பொதுமருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு வார்டு நம்பர் 99 முன் வண்டி நின்றது. பிறகு 108 ஆம்புலன் ஸில் சேவை செய்யும் ஜான் பெரியசாமி, அதன் பின் நடந்த கொடுமைகள் பற்றி பேசுகிறார். ""ஞாயித்துக்கிழமை பகல் 12.45 மணி. குழந்தையை அட்மிட் செய்யாம, அதோட அப்பா வந்திருக்காரா? அம்மா இருக்காங்களா? சொந்தக்காரவுக எங்கேன்னு கேள்வியா கேட்டுக்கிட்டிருக்காங்க. 2 மணி நேரமா குழந்தை வலியால துடிச்சுக்கிட்டே இருக்குது. குடும்பமே விபத்தில் சிக்கிக்கொண்டதை சொல்லி, சிகிச்சை தரச்சொல்றேன். அதுக்கும் நர்சுகள் கேட்கலை. முதலுதவிகூட செய்யாம, வார்டு வாசலிலேயே குழந்தையை துடிதுடிக்க விட்டுட்டாங்க.

3 மணிக்கு யாஷிகாவின் பெரியப்பா சையது வந்து கையெழுத்து போட்டபிறகுதான் அட்மிட் செஞ்சாங்க. ஆனா, டாக்டர்கள் யாரும் இல்லை. டூட்டியில் இருந்த பயிற்சி டாக்டர்களும் ரெஸ்ட்டுக்குப் போயிட்டாங்க. ஜி.ஹெச்சில் குழந்தைய வச்சிருந்தா, ட்ரீட்மெண்ட் கொடுக்காம கொன்னுடுவாங்கன்னு பயந்து,பிரைவேட் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போக நினைச்சாரு பெரியப்பா. நானும் ஒரு சக மனுஷன்ங்கிற முறையில் அப்பல்லோ இருக் குன்னு சொன்னேன். அங்கே தூக்கிக்கொண்டு ஓடினாங்க'' என்றார் வேதனையுடன். அந்த நேரத்திலும் அரசு மருத்துவமனை ஊழியர் கள் சில பேர், ""இவ்வளவு நேரம் இங்கே குழந்தையை வச்சிருந்தீங்கள்ல.. 300 ரூபாய் கொடுங்க'' என்று லஞ்சம் கேட்டிருக்கிறார்கள்.அதன்பின், அப்பல்லோவில் என்ன நடந் தது என்பதை விவரிக்கத் தொடங்கினார் சையது. ""அங்கே 5 டாக்டர்கள் இருந்தாங்க. குழந்தைக்கு நுரையீரலில் காயம்பட்டிருப்ப தால் ரத்தம் அடைபட்டிருக்கு. அதற்கான மருந்து ஸ்டாக் இல்லைன்னு சொல்லி மதுரை முழுக்க தேடினாங்க. அப்புறம் டாக்டர் ஜஹாங்கீர் நியூயார்க்கிலிருந்து வாங்கி வந்தி ருந்ததை யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்லி, 1 லட்சத்து 40ஆயிரம் கட்டச் சொன்னாங்க. எப்படியாவது காப்பாத்திடலாம்ங்கிற நம்பிக்கையோடு மொத்த பணத்தையும் கட்டினோம். இரண்டு நாள் ஐ.சி.யு.விலேயே வச்சிருந்தாங்க. யாரையும் அனுமதிக்கலை. மூணாவது நாள் நாங்க, குழந்தையை பார்த்தே ஆகணும்னு சண்டை போட்டோம். அப்பதான், குழந்தை செத்துப்போச்சு. மீதி பில்லை க்ளியர் பண்ணுங்கன்னு குண்டை தூக்கிப் போட்டாங்க. 2 நாளா எங்க யாஷிகா உயிரோடு இருந்தாளா? ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்களா? ஆபரேஷன் செஞ் சாங்களா? எதுவும் தெரியலை. கவர்மெண்ட் ஆஸ்பத்திரியின் அலட்சியமும், பிரைவேட் ஆஸ்பத்திரியின் பணத்தாசையும் எங்க குடும்பத்து வாரிசை கொன்னுடுச்சி'' என்றார் கண்ணீருடன்.மதுரை அரசு மருத்துவமனை டீன் வரை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என சையது கூறியதால், பொறுப்பு டீன் சிவகுமாரிடம் பேசினோம். ""அந்த குழந்தைக்கு நடந்த சம்பவம் என் கவனத்துக்கு வந்தது. டூட்டியில் இருந்தவங்களை எச்சரித் திருக்கேன். டாக்டர்களுக்கும் நர்சுகளுக்கும் சங்கங்கள் இருக்குதே'' என்றார். நம்மிடம் பதிலளித்தபின் விசாரணையை தீவிரமாக்கி யிருக்கிறார் டீன். ஞாயிறன்று டூட்டியில் இருந்த பயிற்சி டாக்டர்களை நவம்பர் 2-ந் தேதியன்று தனது அறைக்கு விசாரணைக்கு அழைத்தார் டீன் சிவகுமார். பயிற்சி டாக்டர்களோ, ""நாங்க ஜூனியர்ஸ். நர்சுகளெல்லாம் எங்களைவிட சீனியரா இருக்காங்க. வந்தோமா.. ட்ரெயினிங் எடுத்தோமா.. போய்க்கிட்டே இருக்கணும்னு சொல் றாங்க. சீனியர் டாக்டர்கள்கிட்டே புகார் கொடுத்தால், நர்சுகள் சொல்றபடி நடந்துக்குங்கன்னு சொல்றாங்க'' என்று புலம்பி யிருக்கிறார்கள். கடுப்பான டீன், சீனியர் டாக்டர் ஒருவருக்கு போன் போட்டிருக்கிறார். அவர் ஆதவன் பகல் ஷோ பார்த்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. அந்த டாக்டரின் வார்டில் உள்ள நர்சை செல்போனில் தொடர்புகொள்ள அவரும் அதே தியேட்டரில் ஆதவன் பார்த்துக் கொண்டிருந் திருக்கிறார். நொந்துபோன டீனிடம் பயிற்சி டாக்டர்கள், ""பெரும்பாலும் இப்படித்தான். பயிற்சிக்கு வரும் லேடி ஹவுஸ் சர்ஜன்களோடும் நர்ஸ்களோடும் பகல் ஷோ போவதுதான் சீனியர் டாக்டர்களின் ஹாபியா இருக்குது. சாயங்காலம் தங்கள் கிளினிக்குக்கு பேஷண்டுகளை வரச்சொல்லிடுறாங்க'' என்றிருக் கின்றனர். தலையிலடித்துக்கொண்ட டீன், வார்டில் யார், யார் இல்லை என கணக்கெடுத்திருக்கிறார். நவம்பர் 2-ந் தேதி மட்டும் 6 டாக்டர்கள் 9 நர்சுகள் மட்டம் போட்டி ருக்கின்றனர். மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள்-நர்சுகளின் கடமையுணர்ச்சி, ஊசலாடும் உயிர் களை எமலோகத் திற்கு அனுப்பி வைக்கிறது.