பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Thursday, November 12, 2009

சரத் பொன்சேகாவிற்கு எதிராகப் போராட பல்லாயிரக் கணக்கான பிக்குகள் தயார் ?


சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி, சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடட்டால் அதற்கு எதிராக பிக்குகள் முன்னணி போராட்டம் நடத்துவதற்கு உத்தேசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகா இதுவரையில் தான் போட்டியிடுவது குறித்து உத்தியோக பூர்வமாகவோ, அல்லது உறுதியாகவோ, தெரிக்காத போதும், அவர் எதிர்கட்சிகளினால் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனும் நிலை படிப்படியாக உருவாகி வருகிறது.
இதனால் ஆளும் தரப்பு, சரத் பொன்சேகா தேர்தலில் நிற்பது அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே தவிர்ப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. இதன் ஒரு வழிமுறையாக தற்போதைய அரசுத் தலைவருக்கு ஆதரவு தரும் வகையில், சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட முயன்றால், பிக்குகள் முன்னணி போராட்டத்தில் குதிக்கவுள்ளது.
பிக்குகள் முன்னணி, சுமார் 15 ஆயிரம் பிக்குகளுடன் மாபெரும் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு ஆதரவாக மேலும் சில பெளத்த அமைப்புக்களும் போராட்டத்தில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பில் யுத்தத்துக்கு எதிரான அமைப்ப நடத்தவிருந்த பேரணியொன்றின் இடையில் புகுந்த பிக்குமார்களும், பெளத்த அமைப்புகள் சிலவும் பெரும் குழப்பம் விளைவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது