பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Sunday, November 8, 2009

மாணவிகளின் மீது பெண் அதிகாரியின் பேயாட்டம்!



தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தபோதும்... மதுரைக்கு மட்டும் இந்த 5-ந் தேதி வெம்மைப் பொழுதாக மாறி தகிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.மதுரை அழகர்கோயில் பகுதியில் இருக்கும் மஞ்சப்புத்து ஆரிய வைசிய செட்டியார் சமூகத்துக்கு சொந்தமான ஜி.எம்.எஸ்-எம்.ஏ.வி.எம்.எம். என்ஜினியரிங் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் வளாகம் முழுக்க பரபரப்பு.சுற்றிலும் மாணவ-மாணவிகள் முற்றுகையிட்டிருக்க.... உள்ளே ஆர்.டி.ஓ. தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் முன்னிலையில் கல்லூரி நிர்வாகத்துக்கும் மாணவப் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்துகொண்டிருந்தது.மாணவப் பிரதிநிதிகள் காரசாரமான குரலில் "நிர்வாகம் எங்களை அடிமைகள் மாதிரி நடத்துது. தொட்டதுக்கெல்லாம் அபராதம் போடுது. லோக்கல் மாணவர்கள் தங்கள் வாகனத்தில் வரக்கூடாது... கல்லூரி பஸ்ஸில்தான் வரணும்னு கெடுபிடி பண்றதோட... 25 கி.மீ. சுற்றளவில் யூனிபார்மோட எந்த மாணவரை டூவீலரோடு பார்த்தாலும் வண்டியைப் பிடுங்கி அபராதம் போடுது. ஆண்டுதோறும் மேசை நாற்காலி தேய்வதற்கும் ஒரு அபராதமாம். இந்தப் போக்கை நிர்வாகம் மாத்திக்கணும்''’என்றார்கள் பட்டியல் போட்டு.நிர்வாகத் தரப்போ “""மாணவர்களின் ஒழுக்கத்துக் காகத்தான் இதெல்லாம். நிர்வாகத்தின் இத்தகைய முடிவுகளில் தலையிட... மாணவர்களுக்கு அதிகாரம் இல்லை''’என்றது கறராய். இதைத்தொடர்ந்து பேச்சு வார்த்தை தோல்வியடைய... மாணவப் பிரதிநிதிகள் கோபமாய் வெளியேறினர். அடுத்த நிமிடமே...""வதைக்காதே வதைக்காதே... மாணவர்களை வதைக்காதே... போடாதே போடாதே அபராதங்கள் போடாதே... கல்லூரி நிர்வாகமே... நாகரிகமாக நடந்துகொள்...'' என்பது போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். அப்போது மணி மதியம் 2.அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என முடிவெடுத்த மாணவ- மாணவிகள்... 30 கி.மீ. தூரத்தில் இருக்கும் மதுரை மாநகர் நோக்கி ஊர்வலமாய் நடந்தனர். ஊர்வலத்தை சட்டக்கல்லூரி மாணவப் பிரதிநிதிகளான மானுவேலும் அகராதியும் வழிநடத்தினர். ஏறத்தாழ 700 மாணவ-மாணவிகள் கொளுத்தும் வெய்யிலில்... நீதிகேட்டு ஊர்வலமாக நடக்க... போலீஸ் டீம் அவர்களுக்கு பக்கவாட்டில் அணிவகுத்து வந்தது. அப்போது காக்கிகள் பலரின் கண்களும் மாணவி அகராதி மீதே நிலைத்திருந்தது.அகராதி பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்துகிறவர். பொதுநல மாணவ இயக்கத்தின் தலைவியாகவும் இருக்கிறவர். இவரது பெற்றோரான தமிழ்பித்தனும் வெண்மதியும் பெரியார் திராவிடர் கழகப் பிரமுகர்கள். இவர்கள் கலப்புத் திருமணத் தம்பதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.வியர்த்துக் களைத்தபடி 30 கி.மீ. தூரம் நடந்து வந்த மாணவ- மாணவிகளை இணை கமிஷனர்கள் ஜெயஸ்ரீ, தேன்மொழி தலைமையி லான போலீஸ் டீம் வழிமறித்தது. அப்போது மணி மாலை 6.30.""கோரிப்பாளையம் தேவர் சிலைவழியாக ஊர்வலம் போகக்கூடாது''’-என காக்கிகள் தடுக்க... ""அந்த வழியாகத்தான் போவோம்''’-என்றார்கள் மாணவர்கள்.""அப்படியென்றால் கைதுசெய்வோம்''’-என காக்கிகள் சொல்ல...""கல்லூரிக்கு அருகிலேயே எங்களைக் கைது செய்யாமல்... இவ்வளவு தூரம் நடக்க வைத்து ஏன் கைது செய்கிறீர்கள்?''’என்றார்கள் மாணவ பிரதிநிதிகள். அப்போது மாணவ பிரதிநிதிகளில் ஒருவரான கார்த்திக்... ஒரு டீமோடு முன்னேற... டி.எஸ்.பி.கணேசன் ஓடிப்போய் அவர் கையைப் பிடித்து இழுத்துத் தள்ளினார். பதிலுக்கு மாணவர்கள் அவரைப் பிடித்து இழுக்க... யூனிபார்மில் இல்லாமல் சுடிதாரில் இருந்த டி.சி.ஜெயஸ்ரீ டென்ஷனாகி "சார்ஜ்'’என குரல் கொடுத்தார். அவ்வளவு தான்... காக்கிகள் டீம் லத்தியோடு மாணவ-மாணவிகள் மீது பாய.... தடியடி வாங்கிய மாணவ-மாணவிகள் கலைந்து ஓடினர். அவர்களில் அகராதி உள்ளிட்ட 11 பேரை மட்டும் சுற்றிவளைத்தனர் காக்கிகள்.வளைக்கப்பட்ட 11 பேரில் சட்டக்கல்லூரி மாணவி அகராதியை மட்டும் காந்தி மியூசியம் ரோட்டுப் பக்கம் தனியாகத் தரதரவென இழுத்துக்கொண்டு போனது டி.சி.ஜெயஸ்ரீ தலைமையிலான டீம். அகராதியை மற்ற காக்கிகள் அரண்போல் வட்டமாகச் சூழ்ந்துகொண்டு நிற்க... பதட்டமான அந்த சூழ்நிலையிலும் அங்கு நடப்பதை நாம் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தோம். இதை கவனித்த காக்கிகள் நம்மை பாய்ந்து வந்து தடுத்து வாக்குவாதம் செய்ய... அந்தத் தள்ளுமுள்ளுக்கிடையிலும் நாம் நமது கேம ராக் கண்களை மூடவில்லை. அகராதிக்கு நேர்ந்த அத்தனையையும் ஷாட் பை ஷாட்டாகப் படம் பிடித்துக் கொண்டே இருந்தோம்.அப்படி என்ன தான் நேர்ந்தது? அதை சட்டக் கல்லூரி மாணவி அகராதியின் வாயாலேயே கேட்போம்...""என்னைத் தனியா இழுத் துட்டுப் போனதும் டி.சி. ஜெயஸ்ரீ...ஆவேசமா ஓடிவந்து என்னடி நினைச்சிக்கிட்டு இருக்கே... நீ என்ன பெரிய இவளா? போலீஸுக்கு டார்ச்சர் கொடுப்பதே உனக்கு வேலை யாப்போச்சு... உன்னாலதான் மதுரையில் ஈழப் பிரச்சினை பெரிசா ஆச்சு. உன் னையும் ஆயிஷாவையும் அடிச்சி உதைச்சி ஜெயில்ல போட்டோமே... அப்படியும் உன் கொழுப்பு அடங்கலைடீன்னு கேவலமாத் திட்டியதோட... என் துப்பட்டாவைப் பிடிச்சி இழுத்து ஓங்கி என் கன்னத்தில் பட்பட்டுனு அறைஞ்சாங்க. அப்ப திமிராம இருக்க பெண்போலீஸோட சேர்ந்து ஆண்போலீஸும் என்னை அழுத்திப் பிடிக்க... உனக்கு இவ்வளவு திமிராடீன்னு சொல்லிக்கிட்டே பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிள் கையிலிருந்த தடியைப் பிடிங்கி.. என்னை எட்டி உதைச்சி கீழ தள்ளி... கண் மூடித்தனமா அடிச்சதோட... இவளை அடிச்சிக் கொல்லுங்கடீன்னு காட்டுக்கூச்சல் போட.... இதைக்கேட்டு மத்த காக்கிளும் என்னை சுத்திவளைச்சி கம்பால் அடிச்சாங்க. இப்படி வெறித்தனமா அடிச்சி என்னை மட்டும் ஒரு தனி வேனிலும் மத்த 10 பேரை ஒரு வேனிலும் ஏத்தி... எங்களைத் தல்லாகுளம் போலீஸ் ஸ்டேசனுக்குக் கொண்டுபோனாங்க. அங்கும் கேவலமா என்னை டி.சி. மேடம் திட்டி னாங்க. எங்க மேல பல்வேறு பிரிவுகளில் வழக்கைப் போட்டவங்க... எக்காரணம் கொண்டும் மருத்துவமனைக்குப்போய் சிகிச்சை எடுத்துக் கொள்ளமாட்டோம்னு மிரட்டி மத்த 10 பேர்கிட்டயும் கையெழுத்து வாங்கிக்கிட்டாங்க. நான் அப்படி கையெழுத்துப்போடமாட்டேன்னு சொல்லிட்டேன். இதுக்கு மேலயும் எங்களை வச்சிருந்தா பிரச்சினை பெரிசாப்போகும்னு வேற வழியில் லாம எங்களை வெளில அனுப்பிட் டாங்க. என்னைக் குறிவைத்து திட்டமிட்டு தனியே கொண்டு போய் அடிச்ச டி.சி. ஜெயஸ்ரீயை சும்மா விடமாட்டேன். நீதிமன்றத் திலும் மனித உரிமை அமைப்பு களிலும் முறையிட்டு அவங் களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுத்தே தீருவேன்''’என்றார் வேதனை மாறாமல்.டி.சி.ஜெயஸ்ரீயையும் தொடர்புகொண்டு “""சட்டக்கல்லூரி மாணவி அகராதியை.. இப்படி குறிவைத்து தாக்கியது ஏன்?''’’ என்றோம்.அவர் ""அப்படி எந்த சம்பவமும் நடக்கலையே. நான் அந்த ஸ்பாட்டிலேயே இல்லை'' என்றார் கூலாய்.சட்டக்கல்லூரி மாணவியான அகராதி... குறிவைத்துக் கடுமை யாகத் தாக்கப்பட்டவிதம் ஒரு பக்கம் சட்டக்கல்லூரி மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த... இன்னொருபுறம் மதுரை வழக்கறிஞர்கள் இந்த விவகாரத்தை கையிலெடுத்து... காவல்துறைக்கு எதிராக போராட்ட அஸ்திரங்களுக்கு ரெடியாகி வருகிறார்கள்.'கடிதோச்சி மெல்ல எரிக' என்ற திருக்குறளை எப்போது காவல் துறை உணர்கிறதோ... அதுவரை மக்களுக்கும் காவல்துறைக்கும் இடை யில் முளைத்திருக்கும் வேற்றுமைச்சுவர் தகரவே தகராது.