பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Friday, November 13, 2009

திரைக்கூத்து!

விழா நாட்களில்தான் பெரிய ஹீரோக்களின் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் போட்டிருக்கிறது. ஆனால் விஜய்யின் "வேட்டைக்காரன்' படத்தை டிசம்பர் 18-ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறது சன் பிக்சர்ஸ். இதனால் சினிமா வட்டாரங் களில் முணுமுணுப்பும், பரபரப்பும் ஏற் பட்டிருக்கிறது.

பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிப்பதாக இருந்தது. இதில் ரவி தரப்பிற்கு உடன்பாடில்லையாம். இதனால் கமல் மகள் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்யும் வேலைகளில் தீவிர மாக இருக்கிறார் பிரபுதேவா. தனது பாலிவுட் அறிமுகப் படம் ‘"லக்' அதிர்ஷ்டத்தை தராததால் இசையின் மீது கவனம் செலுத்த முடிவு செய்திருந்தார் ஸ்ருதி.ஆனால் பெரிய சம்பளம் கொடுத்து தெலுங்கு படம் ஒன்றில் சித்தார்த் ஜோடியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். தெலுங்கில் நடிக்க தயாராகிவிட்ட ஸ்ருதி தமிழை தள்ளிவைப்பாரா என்ன? அதிலும் பிரபுதேவா இயக்கம் என்பதால் ஸ்ருதியும் ஆர்வம் காட்டு கிறாராம்.

கைவசம் சரியான வாய்ப்பில்லாமல் இருந்த பூனம்பாஜ்வாவை தனது ‘"கச்சேரி ஆரம்பம்' படத்தில் ஜோடியாக்கிய ஜீவா, தனது "சிங்கம் புலி' படத்திலும் ஜோடியாக்கியிருக்கிறார்.‘என்ன சங்கதி?... என கேட்டால் "கதைக்கு பொருத்தமாக இருந்ததால் டைரக்டர்கள் பூனம்பாஜ்வாவை தேர்வு செய்திருக்காங்க. இதில் என்னோட கைங்கர்யம் ஏதுமில்லை' என்கிறார். அடடே... நல்ல கதையா இருக்கே?!

ஹீரோக்களுக்கு நயன் மீதான மோகம் குறைந்துகொண்டே வர.... டைரக்டர்களுக்கு நயன் மீதான மோகம் அதிகரிக்கிறதோ என்னவோ?வெங்கட்பிரபு, தான் இயக்கிவரும் "கோவா' படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு நயனை ஆடவைத்தே தீரவேண்டும் என அடம் பிடித்து வருகிறாராம்.

வடிவேலுவின் காமெடி கூட்டணியில் இருந்த சிலருக்கும் வடிவேலுவுக்கும் சில மனஸ்தாபங்கள். இதனால் கூட்டணியில் இருந்தவர்கள் விவேக்கிடம் போனார்கள். ஆனால் அங்கு வரவேற்பு இல்லை. இதையடுத்து சந்தானத்திடம் ஜாய்ண்ட் ஆகியிருக்காங்க.

அடுத்த ரவுண்ட்டில் களமிறங்கியிருக்கும் சுவா நடிகை ஒரு படவிழாவிற்கு கண்கூசும் விதமாக துணி(!) உடுத்தி வந்திருந்தார். அது ஒரு பத்திரிகையில் பளிச்சென வந்துவிட்டது. கல்யாண பேச்சுகள் நடந்துகொண்டி ருக்கும் நேரத்தில் இந்த போட்டோ பிரசுரமானது நடிகையை சங்கடப்படுத்திவிட்டது. அந்த புகைப்படக்காரருக்கு போன் போட்ட நடிகை, "என்னாண்ணா இப்புடி போட்டோ புடுச்சு போட்ருக்கீங்க?' என வருத்தப்பட.... "அப்புறம் ஏம்மா இப்படி ட்ரெஸ் பண்ணீட்டு வந்தீங்க?' என போட்டோ பார்ட்டி கேட்டிருக்கிறார். "இந்த மாதிரி விழாக்களில் தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர்கள் வருவாங்க. அவங்க கண்ல கிளாமரா தட்டுப்பட்டா எதாவது சான்ஸ் கிடைக்குமே... அதான்! மத்தபடி பொது இடத்துல இப்புடி வரணும்னு ஆசையா என்ன?’’ -என பாவமாக பதில் சொன்னாராம்.