பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Tuesday, November 10, 2009

பெற்றோரை பிரிந்த அசின்


அசின் என்ற கிளிக்கு இறக்கை முளைத்துவிட்டது. எனவே வீட்டைவிட்டே அவர் பறந்துவிட்டார், என அவரது பெற்றோர் சோகத்துடன் புலம்பி வருகின்றனர்.அப்படி என்னதான் நடந்தது?இதுவரை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த அசின், இனி அப்பா அம்மா இருவருமே என்னிடம் இருக்காதீர்கள் என கறாராகக் கூறிவிட்டு, மும்பையில் தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டாராம். கஜினி இந்திப் படத்தில் நடித்த போது சென்னையில் உள்ள சொந்த வீட்டை காலி செய்துவிட்டு மும்பைக்குப் பறந்தார் அசின். உடன் பெற்றோரும் சென்றனர். அங்கு முதலில் ஒரு ஃபிளாட்டை வாங்கி அசின், பின்னர் பெரிய பங்களா ஒன்றையும் விலைக்கு வாங்கினார். அங்கே குடி போனார். உதவிக்கு அப்பா தொட்டும்கல் மற்றும் அம்மாவை உடன் வைத்துக் கொண்டார். அசினுக்கு மானேஜர் என்று யாருமில்லை. அந்த வேலையை செய்து வந்தவர் அவரது அப்பாதான். இந்த நிலையில், அசின் சல்மான்கான் ஜோடியாக நடித்த "லண்டன் ட்ரீம்ஸ்" படம் சமீபத்தில் திரைக்கு வந்த. ஆனால் எதிர்பாராத விதமாக இந்தப் படம் பிளாப்பாகிவிட்டது. இன்னொரு பக்கம் ஜோதா அக்பர் படம் எடுத்த அசுதோஷ் கோரவாரிகரின் புதிய படத்திலிருந்தும் விலகிவிடடார்.தந்தையின் தவறான யோசனையால்தான் இந்தப் படம் கைவி்ட்டுப் போனதாக பீல் பண்ணுகிறாராம் அசின்.இந்நிலையில், திடீரென்று அவர் தனது அப்பா அம்மாவை விட்டுப் பிரிந்து, வேறு ஒரு வீட்டுக்கு குடிபோய்விட்டாராம். அங்கு அவர் தனியாகவே வசிக்கிறார். அசின், தாய்-தந்தையை பிரிந்ததற்கு காரணம் என்ன? என்பது மர்மமாக இருக்கிறது.