இலங்கையின் முன்னாள் ராணூவ தளபதி சரத்பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். அரசியலுக்கு புதிய தலைவரான அவர், அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்துள்ளார்.
அவர் உள்ளூர், அயல்நாட்டு ஊடகவியலாளர்களுடன் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது இதை அறிவித்துள்ளார்.
அப்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சரத் பொன்சேகா, நாட்டின் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக புலிகள் இயக்க போராளிகள் தமது பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் தாம் அதை வரவேற்பேன்.
தனது தேர்தல் பிரசாரத்துக்காக புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பெற்றோர்கள் தம்மிடம் வந்து சேர்ந்தாலும் அவர்களைத் தான் வரவேற்பேன் எனக் கூறியுள்ளார்.
அவர் மேலும், 50,000 ரூபாய் சொற்பத் தொகையை மட்டும் வைத்துக் கொண்டு தம்மால் அரசியல் நடத்த முடியாது. எனவே புலிகள் ஆதரவாளர்களிடமிருந்தும் நிதி உதவியை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.