மாவீரர் நாளில் கலந்து கொண்டு பேசுவதற்காக கனடா சென்றார் இயக்குநரும் "நாம் தமிழர்' இயக்கத்தின் தலைவருமான சீமான். மாவீரர் நாளில் இரண்டு கூட்டங்களில் இவர் பேசுவதாக திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதேசமயம், மாவீரர் நாளுக்கு முதல் நாள் கனடிய தமிழ் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கர்ஜனை செய்தார் சீமான். இதனைத் தொடர்ந்து சீமானை கைது செய்து, விசாரித்துவிட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது கனடா அரசு.
விசாரணையில் முழுமையாக நடந்தது என்ன? -சீமானிடம் கேட்டோம்.
""நான் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்தனர் கனடா இமிக்ரேஷன் அதிகாரிகள். அவர்களுடன் இருந்த ஒரு அதிகாரி என்னை அடையாளம் காட்டினார். யார் இவர்கள் என்று நான் யோசித்துக் கொண்டேயிருக்கையில், "எழுந்து நில்... திரும்பி நில்... கால்களை அகட்டி வை...' என்று கூறியபடியே எனது இரண்டு கைகளையும் முதுகுபுறமாக வளைத்து விலங்கிட்டனர். நான் அதிர்ச்சி அடைந்தேன்.
"கனடாவுக்கு வந்து இந்தியாவுக்கு எதிராகவும் உலக நாடுகளுக்கு எதிராகவும் சிங்களவர்கள் மீது குண்டு வீசுவோம் என்றும் எல்.டி.டி.ஈ.யை ஆதரித்தும் பேசியிருக்கிறாய். அதனால் உன்னை கைது செய்கிறோம். இண்டர்போல் அதிகாரி உன்னை விசாரிப்பார்' என்றனர். அப்போது நான் கூறியதை கேட்க மறுத்து, கைவிலங்குடன் இண்டர்போல் அலுவலகத்துக்கு கொண்டு போனார்கள்.நிறைய அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், சீக்கிய அதிகாரி ஒருவர் மட்டும் விசாரிப்பதற்காக காத்திருந்தார்.கனடா நாட்டு சட்டத்தின்படி பின்புறமாக கை விலங்கிடப்பட்டு இண்டர்போல் அதிகாரிமுன்பு நிறுத் தப்பட்டபோது, "விசாரணை இரண்டு மணி நேரத்துக்குமேலே நடக்கும். அதனால் கைவிலங்கை கழட்டி விடுங்கள்' என்று அந்த சீக்கிய அதிகாரி சொல்ல, ஒரு கதவை சுட்டிக்காட்டி "அந்த வழியாக இவர் ஓடிவிடு வார்' என்று கை விலங்கை அகற்ற மறுத்தனர் கனடா அதிகாரிகள். அதற்கு, சீக்கிய அதிகாரி "அப்படியானால் கைவிலங்கை முன்புறமாக மாற்றுங்கள்' என்று சொன்னதும் என் கை களை முன்புறமாக விலங்கிட்டனர்.
என்னை விசாரிக்க துவங்கிய சீக்கிய அதிகாரியிடம்..."நாம் தமிழர் இயக்கம்' தொடர்பாக வெளிவந்த புகைப்படங்கள், பேச்சுக்கள், பிரபாகரனும் நானும் இருக்கும் புகைப் படங்கள் இருந்தன.இவ்வளவு படங்களையும் எப்போது சேகரித்தார்கள் என்று ஆச்சரியப்பட்டேன்.நானும், பிரபாகரனும் இருக்கும் புகைப் படத்தில் பிரபாகரனை காட்டி "இவர் யார்?' என்றார் சீக்கிய அதிகாரி. "பிரபாகரன்' என் றேன்.
அடுத்து என் படத்தைக் காட்டி இது நீதானே? என்று கேட்க "ஆமாம்' என்றேன்.நீ எல்.டி.டி.ஈ.யை ஆதரிக்கிறாய், "நீ ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்த றியா? இல்லையா? அதைச் சொல்' என்று அவர் அதட்ட, "இந்திராகாந்தி கொலையை நீங்க நியாயப்படுத்தறீங்களா?' என்று எதிர் கேள்வியை நான் கோபமாக கேட்டேன். உடனே அவர், "நீ கேள்வி கேட்கக்கூடாது. நான் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்' என்றார்.அப்போது நான், "ராஜீவ் கொலையை நியாயப்படுத்த வில்லை.
இந்திய அமைதிப்படையை அனுப்பி ஈழத் தமி ழர்களை கொன்று குவித்தனர். அது தவறு என்று பேசியிருக்கிறேன்' என்றேன். உடனே சட்டென்று அந்த அதிகாரி, "அது தவறு என்றால், ராஜீவ் கொலையை நியாயப்படுத்துகிறாய் என்றுதான் அர்த்தம்' என்று எரிந்து விழுந்தார்.
உடனே நான், "குதர்க்கமாக நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள்... சரி... பொற்கோவிலுக்குள் ராணுவத்தை இந்திரா அனுப்பியதை சீக்கியர்கள் நியாயம் என்கிறார்களா?' என்று எதிர்கேள்வி கேட்டேன். அமைதியாக இருந்தார். ஒரு நிமிடம் கழித்து "கனடாவில் வந்து புலிகளை ஆதரித்து பேசக்கூடாது?' என்று அவர் சொல்ல "அதுதான் ஏன் பேசக்கூடாது' என்று நான் கேட்க, "தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிக்கக்கூடாது. அதனால் இங்கு சட்ட- ஒழுங்கு கெடும்'' என்றனர்.இண்டர்போல் அதிகாரி மீண்டும் பிரபாகரனை காட்டி, "இவர் உங்களுக்கு என்ன உறவு?' என்று கேட்க, அமைதியாக இருந்தேன். உடனே அவர் உனக்கு இவர் பிரதரா? என்று கேட்க, "ஆமாம்... யெல்டர் பிரதர்...' "தமிழ் ரத்தம். அந்த வகையில் எனக்கு மூத்த அண்ணன் அவர்' என்று சத்தமாக சொன்னேன்."நீ உடனடியாக இந்தியாவுக்கு போய்விட வேண்டும். மீறி இருந்தால் சிறையில் அடைப்போம்.
அதன்பிறகு நீதிபதி என்ன சொல்கிறாரோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்கள்.அதற்குள் கனடா தமிழ் இளைஞர்கள், வழக்கறிஞர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள்.அவர்களும் "மாவீரர் நாளில் இரண்டு கூட்டங்களில் பேசுவதாக இருக்கிறது. அதில் ஒரு கூட்டத்திலாவது பேச அனுமதியுங்கள்' என்று சொல்ல, அதற்கு அதிகாரிகள், "பேசியதும் உடனே பிளைட் ஏறிவிட வேண்டும். அதுவரை கடவுசீட் எங்களிடம்தான் இருக்கும். சரியா?' என்று சொல்ல, சரி... என்றோம். அப்போது, உடனே கனடா அதிகாரிகளில் ஒருவர் கொஞ்சம் பொறுங்கள்... என்று கூறிவிட்டு வெளியே சென்று யாருக்கோ பேசினார். பேசி முடித்துவிட்டு அவசரமாக உள்ளே வந்தவர்... "அதெல்லாம் முடியாது. உடனே நீங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்' என்று கூறி அங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு அழைத்து வந்து... ஒரு தனி அறையில் அடைத்து விட்டனர்.
அப்போதும் கைவிலங்கு அகற்றப்படவில்லை.அந்த அறையில் ஒரு கேமரா மூலம் நான் கண்காணிக்கப்படுவதை அறிந்தவுடன் "பேசாமல் பேசவைப்பான் பிரபாகரன்' என்ற பாடலை உரக்க பாடிக் கொண்டே இருந்தேன். விமானம் ஏறும்போதுதான் என் கைவிலங்கு அகற்றப்பட்டது'' என்ற சீமான், ""ராஜபக்சே சகோதரர்களின் சிங்கள இனவாதத்திற்கு ஒவ்வொரு நாடும் எப்படி யெல்லாம் உறுதுணையாக இருக்கிறதை அப்போது நான் உணர்ந்தேன். இது போன்ற அச்சுறுத்தல்களெல்லாம் என் ஈழ உணர்வை முடக்கிப் போட்டுவிட முடியாது. தமிழீழ போராட்டத்தை முன்னைவிட வலிமையாக நடத்துவேன்'' என்கின்றார் ஆவேச மாக.