இந்தப் படத்தின் அறிமுக பிரஸ் மீட் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற விஷால், படத்தின் தலைப்புக்கான காரணத்தைக் கூறினார்:
"இந்தப் படம் என்னுடைய சொந்த வாழ்க்கைக் கதையா என்று நிறையபேர் கேட்கிறார்கள். அவர்களுக்கு எனது பதில், ஆம் என்பதுதான்.இப்படத்தில் வரும் சில சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. திரில்லர் படம்போல் இருக்கும். 3 கதாநாயகிகள் உள்ளனர். அவர்களில் யாரை நான் திருமணம் செய்கிறேன் என்பது சஸ்பென்ஸ் ஆக நகரும்.
பிளேபாய் கேரக்டர்தான் என்றாலும் செம இன்ட்ரஸ்டிங்காக சுவாரஸ்யமாக இருக்கும் படம். இதில் ஸ்ரேயா, ரீமாசென் போன்ற 3 நடிகைகளை நடிக்க வைக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் ஒவ்வொருத்தரும் தனக்கு முக்கியத்துவத்தை எதிர்பார்த்தனர். எனவேதான் புதுமுக நடிகைகளை நடிக்க வைத்தோம்.இந்தப் படம் முடித்ததும் நான் இமயமலை போகிறேன். இந்த விஷயத்தில் நான் ரஜினியைக் காப்பியடிப்பதாக சிலர் எழுதியுள்ளனர். அது உண்மையல்ல. அவரை நான் மதிப்பவன்.
ஆனால் அவரைக் காப்பியடிக்க வேண்டியதில்லை.இமயமலைக்கு போவது பிடிப்பதால் போகிறேன். ஒவ்வொரு படம் முடிந்ததும் இமயமலை போய் வருகிறேன். அது என் தனிப்பட்ட விஷயம். சில நேரங்களில் லொகேஷன் பார்க்கக் கூட போவேன் என்றார்.