மலையிலிருந்து திரும்பிய பிறகும் உட லில் மூலிகை மணம் மாறாமலே இருக்கும். இந்தப் பகுதியில் மழை பெய்தால் இங்கிருப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக சந்தோஷப்படுபவர்கள் கேரள வைத்தியர்கள்தான். ஏனென்றால் மழைக் காலத்தில்தான் மூலிகைகள் செழித்து வளரும். இங்குள்ள மக்கள் கொஞ்சம்பேர்தான். அவர் களுக்கு மூலிகை மருத்துவமெல்லாம் தெரியாது. இங்குள்ள மூலிகைகளின் மகத்துவத்தை எப்படியோ மோப்பம் பிடித்து கேரள வைத்தியர்கள் இங்கே வர ஆரம்பித்தார்கள்.
அப்படி வருபவர்கள் மூட்டை மூட்டையாக மூலிகைகளை பறித்துக்கொண்டு போகிறார்கள். பல ஆண்டு களாகத் தொடர்ந்து நடக்கும் இந்தத் திருட்டை நாங்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கேரள வைத்தியர்கள் தூக்கியெறியும் பிச்சைக் காசுக்கு இங்குள்ள வனத்துறையினர் விலை போகிறார்கள்'' என்றார் கோபமாக.இதே மலையில் குடில் அமைத்து குடியிருக்கும் சித்தரான விஜயநந்தா சரஸ்வதி "பேசப்படும் வரலாறு' என மருந்துவாழ்மலை குறித்து சிலாகித்தார்.
""ராமாயணத்தைப் படித்தவர்களுக்கும், அனுமன் பக்தர்களுக்கும் இம்மலையின் சிறப்புகள் தெரியாமல் இருக்காது. இலங்கையில் ராவணனோடு நடந்த போரில் மூர்ச்சையாகிக் கிடந்த லட்சுமணனைக் காப்பாற்ற இமயமலையிலிருந்து அமிர்தசஞ்சீவி மூலிகை மலையைப் பெயர்த்துக்கொண்டு பறந்து வந்தார் அனுமன். அந்த தெய்வீக மூலிகையின் வாசத்தை நுகர்ந்துதான் உயிர் பிழைத்தார் லட்சுமணன். அதே மலையோடு அனுமன் மீண்டும் இமயமலைக்குப் பறந்தபோது அதன் ஒரு பகுதி கீழே விழுந்தது. அதுதான் இந்த மருந்துவாழ்மலை என்றவர்...""பதினஞ்சு வருஷத்துக்கு முன்னவரை 109 வகையிலான சக்தி நிறைந்த மூலிகைகள் இம்மலையில் செழித்துக் கிடந்தன. குறிப்பாக ஜலத்தரட்டி -இந்த மூலிகையைச் சாப்பிட்டால் மூன்று நாட்களுக்கு பசியே வராது.
மிர்த சஞ்சீவி மூலிகை -செத்த உடம்புக்கு மீண்டும் உயிர் கொடுக்கும். மயிலாடு பச்சை -உடல் வேதனையைப் போக்கும். விராலிக்கு செம்பை தங்கம் ஆக்கும் சக்தி உண்டு. ஆணை நெறிஞ்சி -கிட்னியில் உள்ள கல்லைக் கரைக்கும். பெரிய நங்கை- விஷத்தை முறிக்கும். நீரிழிவு நோய்க்கு சிறிய நங்கை. நரம்பு, தசைப்பிடிப்பு குணமாக சிவனார் வேம்பு. இப்படி 109 வகை மூலிகைகளோடு இருந்த மலையில் இப்போது இருப்பது 51 வகை மூலிகைகள்தான்.
மற்ற முக்கியமான மூலிகைகளையெல்லாம் கேரள வைத்தியர்கள் வேரோடு பிடுங்கிட்டுப் போயிட்டாங்க'' என்றார் வேதனை யுடன்.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ""மருந்து மூலிகைகள் பெரும்பாலான மலையடிவாரங்களில் கிடைக்கவே செய்கின்றன. ஆனால் இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கும் உயிர் கொடுக்கக்கூடிய மூலிகைகள் மருந்துவாழ் மலையில்தான் கிடைக் கின்றன. வட இந்தியாவிலிருந்து எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்கள், "நீங்கள் பயன்படுத்துவது இமயமலை யிலிருந்து தருவித்த மூலிகைகளா? ' என்று மறக்காமல் கேட்பார்கள். அடுத்து, "மருந்துவாழ்மலை மூலிகைகளைக் கொண்டு சிகிச்சையளிப் பீர்களா?' என்றும் குறிப்பிட்டுக் கேட்பார்கள். எங்களிடமும் மருந்துவாழ் மலை மூலிகைகளிலிருந்து தயாரான எண்ணெய்கள் உள்ளன. அவைகள் நாங்கள் பணம் கொடுத்து வாங் கியவை'' என்று பெருமிதத்துடன் கூறினார்.
நாராயண சைத்தன்யா என்பவர்...""இதுல கொடுமை என் னன்னா... இங்கேயிருந்து கடத்திட்டுப் போற மூலிகைய வச்சு எண்ணெய் தயாரிச்சு, கோடி கோடியா சம்பாதிக்குறவங்க தலையில தேய்ச்சு, உடம்பு முழுக்க ஊத்தி அலுப்புதீர மசாஜ் பண்ணி விட்டு "ராயல் ட்ரீட்மெண்ட்' என்று லட்சக்கணக்குல கறந்துடறாங்க இந்தக் கேரள வைத்தியருங்க. இங்கே தமிழ்நாட்டுல நடிச்சு சம்பாதிக்கிற ரஜினிக்கு கேரள வைத்தியம்தான் பிடிச்சிருக்கு. உளிச்சல், பிழிச்சல்னு சகலமும் பண்ணிட்டு வர்றாரு."பேச்சும் மூச்சும் தமிழ்'னு சொல்லிட்டிருக்கிற வைகோவும் கூட அப்பப்ப கேரளாவுக்குப்போயி மசாஜ் பண்ணிட்டு ஃப்ரெஷ்ஷா வர்றாரு. மற்ற மாநில வி.வி.ஐ.பி.க் களும்கூட கேரள வைத்தியம்னா "ஆ'ன்னு வாய பொளக்குறாங்க.
பாருங்களேன்... நம்ம தமிழ்நாட்டு மூலிகைய வச்சு... கேரளாக்காரன் என்னமா பொழைக்குறான். இதெல்லாம் திருட்டு மூலிகைன்னு தெரிஞ்சோ, தெரியாமலோ நம்மாளுங்களும் அங்கே போய்தான் பணத்தைக் கொட்டுறாங்க.52 வருஷமா இந்த மலைலதான் வாசம். இங்கே கிடைக்கிற மூலிகை இமயமலையைத் தவிர வேற எங்கேயும் கிடைக்காது. அத்தனை சிறப்புள்ள மூலிகைகளை இங்கேயிருந்து மூட்டை மூட்டையா கடத்திட்டுப் போறாங்க'' என்று பெருமூச்சுவிட்டார்."மூலிகைகளை மட்டுமல்ல... மலையையே பெயர்த்துக்கொண்டு போகிறார்கள் கேரள வைத்தியர்கள்!' -பலரும் ஆதங்கத்தோடு சொன்ன இந்தக் குற்றச்சாட்டை குமரி மாவட்ட வனத்துறை அலுவலர் சுந்தர்ராஜ் முன் வைத்தோம்.""எங்களால முடிஞ்ச அளவுக்கு தடுக்க முயற்சி பண்ணுறோம்.
கேரளாவுக்கு அரிசி, மணல் கடத்துற மாதிரி மூலிகைகளையும் கடத்துறாங்கன்னு எழுதி இதைப் பெரிய விவகாரமா ஆக்கிடாதீங்க'' என்று சிரித்தார்.தமிழகத்திலிருந்து அரிய மூலிகைகளைத் திருடிச் சென்று உலக அளவில் கல்லா கட்டிக்கொண் டிருக்கிறது கேரளா! அட, கொடுமையே!