பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, December 5, 2009

கொழும்பு அப்பல்லோ மருத்துவமனையை வாங்கி விட்டாரா கோத்தபயா?

கொழும்பில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை யை மறைமுகமாக கோத்தபயா ராஜபக்சே வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.இந்தியாவின் முன்னணி மருத்துவமனைக் குழுமம் அப்பல்லோ. இது இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒரு கிளை அமைத்திருந்தது.
இலங்கை இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த மருத்துவமனையை அப்பல்லோ மருத்துவமனையை நடத்தி வந்தது அப்பல்லோ.இந்த நிலையில் தற்போது இந்த மருத்துவமனையின் பெயர் லங்கா ஹாஸ்பிடல்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த மருத்துவமனையின் தலைவராக கோத்தபயா ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இந்த மருத்துவமனையை கோத்தபயா ராஜபக்சே வாங்கி விட்டதாக பேச்சு எழுந்துள்ளது.

ஆகஸ்ட் 14ம் தேதி லங்கா ஹாஸ்பிடல்ஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் என்ற பெயரில் மாற்றப்பட்ட அப்பல்லோவின் இயக்குநர் குழுவில் கோத்தபயா சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஏற்கனவே இருந்த இயக்குநர் குழு கலைக்கப்பட்டு கோத்தபயா தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லங்கா ஹாஸ்பிடல்ஸ் என்று மாற்றப்பட்டுள்ள அப்பல்லோவில் 86 சதவீத பங்குகளை இலங்கை இன்சூரன்ஸ் நிறுவனம் வைத்துள்ளதாம்.இதுகுறித்து லங்கா ஹாஸ்பிடல்ஸ் தரப்பில் கூறுகையில், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாடு நவம்பர் 16 ஆம் தேதியுடன் காலாவாதியானது.இதையடுத்து அப்பல்லோ என்ற பெயரில் இருந்த தனியார் மருத்துவமனையானது அரசு கட்டுப்பாட்டில் வரவேண்டும் என உச்சநீதிமன்றம் பணித்துள்ளதையடுத்தே அதன் பெயர் லங்கா ஹாஸ்பிடல்ஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கோத்தபய ராஜபக்சேவை உள்ளடக்கி புதிய இயக்குநர் குழு உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படடுள்ளது.ஆனால் கோத்தபயா இந்த மருத்துவமனையை வாங்கி விட்டதாகவே இலங்கையில் பேச்சு அடிபடுகிறது.ஏற்கனவே பல தனியார் நிறுவனங்களை கோத்தபயா உள்ளிட்ட ராஜபக்சே சகோதரர்கள் சரமாரியாக வாங்கி வருவதாக சர்ச்சை உள்ள நிலையி்ல தற்போது இந்த வரிசையில் அப்பல்லோவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.