பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, December 5, 2009

வன்னி மாவீரர் இல்லம் அரசாங்கத்தால் தரைமட்டமாக அழிப்பு

ன்னிப் பகுதியானது இலங்கை அரசாங்கத்தின் கைகளில் வந்துவிட்ட நிலையில், அங்கு அபிவிருத்திப் பணிகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக ராணுவத்தினர் அறிவித்து வருகின்றனர்.
உண்மையில் அங்கு வீரச்சாவடைந்த விடுதலைப் புலி மாவீரர்களுக்காக கட்டப்பட்டிருந்த மயானங்கள், நினைவுச் சின்னங்கள் என்பன அழிக்கப்பட்டு வருவதாகவும் அவ்விடங்களில் போரில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் சிலைகளை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆனையிறவு ராணுவத் தளத்தில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் நினைவாலயம் ஒன்று கட்டப்பட்டு வரும் நிலையில், மேலும் இதேபோன்ற நினைவுத் தூபிகள் கட்டப்படும் பொருட்டு கிளிநொச்சி நகர விளையாட்டு மைதானம் சுத்தமாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வன்னியின் பல பாகங்களிலும் புலிகளின் கல்லறைகளை நீக்குவதும் ராணுவ சிலைகள் எழுப்புவதிலும் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.வன்னியில் ஏ 9 சாலைக்கு உட்புறமாக மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்த மாவீரர்களின் கல்லறைகள் முற்று முழுதாக தரையோடு அழிக்கப்பட்டுள்ளன.