எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு கடுகதி வேகத்தில் அடையாள அட்டைகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.
குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளாராம், இந்த அறிவுறுத்தல் யாரிடம் இர்ந்து தேர்தல் ஆணையாளருக்கு பிறப்பிக்கப்பட்டது என இதுவரை தெரியவில்லை.
சுமார் 2,000 பெண் போராளிகள் உள்ளிட்ட 11,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் 17 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மூன்று முகாம்கள் நிரந்தர தடுப்பு முகாம்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது இவ் வேளையில் வோட்டுக்களைப் பெறும் நோக்கில் ரஜபக்ஷ பிரதர்ஸ் தமது நாடகத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டனர்.
தடுப்பு முகாம்களில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்கம் பதிலளிக்க உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் எந்த மாதிரியான சூழலில் வாக்களிக்கப்போகின்றார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மையே