பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, December 5, 2009

யாழில் இளம் தாய் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் ஒரு பிளையின் தாயார் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இளம் தாயான இவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியபின்னர், கொலைசெய்து புதைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் யாரால் கொலைசெய்யப்பட்டார் எப்போது இது நடந்தது என்ற விபரங்களைச் சரிவரப் பெற முடியவில்லை. கொலைசெய்யப்பட்டவர் 36 வயதுடைய செல்வபாமா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் அராலியில் உள்ள சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் பூத உடலை அவர் குடும்பத்திடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. செல்வபாமாவின் உடலை அவரது மகள் அடையாளம் காட்டியிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் இவ் உத்தரவைப் பிறப்பித்ததாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து அதிர்வின் நிருபர் தெரிவித்தார்.