பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Tuesday, December 1, 2009

காஞ்சிபுரத்தில் நடனப்பள்ளி... பிஎச்டி படிப்பு... சொர்ணமால்யாவின் மறுபக்கம்

திரையில் துண்டு துக்கடா பிட்டு ரோல்களில் வந்தாலும், இன்னொரு பக்கம் தனது நடனப்பள்ளியில் பிஸியாக இருக்கிறார், முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட சொர்ணமால்யா.சன் டிவியின் இளமை புதுமை மூலம் பிரபலமாகி, பின்னர் விஜய் காந்தின் எங்கள் அண்ணாவில் பிரபுதேவா ஜோடியாகி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் சொர்ணமால்யா.
பின்னர் திருமணமாகி, விவாகரத்துமாகியது. இடையில் காஞ்சி மட விவகாரங்களில் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆக, அப்போதும் சினிமாதான் கைகொடுத்தது. சில காலம் ஒதுங்கியிருந்தவருக்கு, பிரகாஷ் ராஜ் ஆதரவில் கிடைத்த வாய்ப்புதான் மொழி. அவரது பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது அந்தப் படத்தில். இப்போது ரேவதி இயக்கும் யாதுமாகி நின்றாய், பாரதிராஜாவின் தெற்கத்திப் பொண்ணு தொடர்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கூடவே தனது நடனப்பள்ளியை நடத்தி வருகிறார். சென்னை தவி, காஞ்சிபுரத்திலும் நடனப் பள்ளி நடத்துகிறார் சொர்ணமால்யா. லோக்கலில் இவருக்கு ஏக சப்போர்ட்டாம். இதையெல்லாம் விட இப்போது சொர்ணமால்யா முக்கியமாகக் கருதுவது தனது பிஎச்டி படிப்பைத்தான். கலைத்துறைக்கு உபயோகப்படும் விதத்தில் இந்த பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுள்ளாராம்.

அடுத்து...?"அடுத்து​ சினிமா டைர​க்ஷன் பண்​ண​வேண்​டும் என்று ஆசை​யி​ருக்​கி​றது. ஆனால் இப்​போது அந்த எண்​ணம் இல்லை. ​ பிஎச்.டி.முடித்​து​விட்​டு​தான் பண்​ண​வேண்​டும் என்று வைராக்​கி​யத்​தில் இருக்​கி​றேன். டாக்​டர் சொர்​ண​மால்யா ஆகி​விட்​டுத்​தான் டைரக்​டர் சொர்​ண​மால்யா ஆவேன்..." என்கிறார்.நல்லாயிருந்தா சரி!