பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Saturday, December 5, 2009

இந்திய ராணுவ கம்ப்யூட்டர் நெட்வோர்க்கில் சீனா ஊடுறுவல்!

டெல்லி: சீனா வையொட்டியுள்ள வட கிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பை மேற்கொள்ளும் இந்திய ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் சீனா ஊடுறுவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ராணுவ கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை தங்களது பகுதியிலிருந்தபடி அறிந்து கொள்ள உதவும் சாப்ட்வேர்கள், வைரஸ்கள் மூலம் இந்த உளவு வேலையை செய்துள்ளது சீனா என்றும் தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள சுக்னா என்ற இடத்தில் வடகிழக்குப் பிராந்திய பாதுகாப்பை மேற்கொள்ளும் ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் தலைமை அலுவலகம் உள்ளது.இங்குள்ள கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள்தான் சீனா ஊடுறுவியுள்ளது.
இங்குள்ள கம்ப்யூட்டர்களில் இடம் பெற்றுள்ள தகவல்களை சீனாவில் இருந்தபடி சுட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.சீனாவின் உளவு சாப்ட்வேரை இந்திய ராணுவ கட்டமைப்புக்குள் ஊடுருவ வைத்ததில் சீனாவுக்கு இந்திய ராணுவத்தில் யாரோ துணை போயிருக்கலாம் என்றும் தெரிகிறது. அது யார் என்பதை அறிய தற்போது விசாரணை நடந்து வருகிறது.
அதேசமயம், வட கிழக்குப் பிராந்திய பாதுகாப்பு குறித்த பல முக்கியத் தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை சீனா, அறிந்து கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.இந் நிலையில் ராணுவ தலைமையகம் அருகே சமீபத்தில் தனியார் கல்வி நிறுவன வளாகம் ஒன்றுக்கு ராணுவம் அனுமதி அளித்திருந்தது.
தற்போது இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த அனுமதியை அளித்தவர் ராணுவச் செயலாளர் லெப்டினென்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷ் மற்றும் 3 அதிகாரிகள் என்பது தெரிய வந்துள்ளது. இந்திய ராணுவத்தின் கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் சீனா ஊடுறுவியிருப்பது கடந்த 2007ம் ஆண்டு முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. சிக்கிம், பூட்டான், திபெத் ஆகியவை சந்திக்கும் இடத்தில் உள்ள டோகா லா என்ற இடத்தில் உள்ள இந்தியா வின் ஆளில்லாத ராணுவ பங்கர்கள் இரண்டை சீனா தாக்கித் தகர்த்தது
அதன் பிறகுதான் கம்ப்யூட்டர்களில் இருந்து முக்கியத் தகவல்களை சீனா உளவு பார்ப்பது தெரிய வந்தது.சீனாவின் செயலால் எந்த அளவுக்கு இந்திய ராணுவத்தின் திட்டமிடல், பாதுகாப்பு உத்திகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.