கலைமாமணி விருது பெற்றது பெருமையாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. நான் இந்தி பட உலகிற்கு போய்விட்டாலும், என் தாய் வீடு தமிழ் பட உலகம்தான். அதிக படங்களில் நடித்தது இங்கே தான். எனக்கு தகுந்த நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பேன்.மும்பையில் என்னை பற்றி நிறைய வதந்திகள் பரப்புகிறார்கள். நான் ரூ.2 லட்சம் செலவில் செருப்பு அணிந்திருப்பதாக, எழுதுகிறார்கள். அதெவெல்லாம் சுத்தப்பொய். அங்கே நான் பார்ட்டி, கிளப், பப்களுக்கு போக மாட்டேன். வீட்டில் இருந்து நேராக படப்பிடிப்புக்குத்தான் போவேன். முடிந்ததும் நேராக வீடு திரும்பி விடுவேன். அதனால் என்னை பற்றி வேண்டும் என்றே வதந்திகளை உருவாக்கி பரப்புகிறார்கள். கற்பனை கலந்த கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள்.எனக்கு யார் மீதும் பொறாமை கிடையாது. என்னை பார்த்து யாராவது பொறாமைப்படுகிறார்களா? என்பது கூடத் தெரியாது.நான் யாருக்கும் பார்ட்டி கொடுப்பதும் இல்லை.
என் பிறந்த நாளுக்கு உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டோம். அவ்வளவுதான். மும்பையில் எனக்கு பாய் பிரண்ட்டே கிடையாது. நான் பாய் பிரண்ட் இல்லை என்று சொல்வதை அங்கே ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.எனக்கு கணவராக வருபவர் கோடீஸ்வரனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சாதாரண குடும்பத்து இளைஞராகவும் இருக்கலாம். இங்கிருந்து இந்தியில் நடிக்க வரும் யாரைப் பார்த்தும் எனக்குப் பொறாமை இல்லை. இந்திப் படவுலகம் ரொம்பப் பெரியது. அங்கு யாரும் வந்து போகலாம். த்ரிஷா, நயன்தாராவும் அப்படியே. எனக்கு நல்ல படத்தில் நடித்தால் போதும்.
அது விருது பெற்றால் சந்தோஷப்படுவேன். இல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டேன்.திரிஷாவும், நயன்தாராவும் இந்தி பட உலகிற்கு வருவதால் உங்களுக்கு பாதிப்பா? என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். யார் வந்தாலும் நான் அவர்களை வரவேற்கிறேன். என் வேலையில் நான் கவனம் செலுத்துவேன்.மும்பையில், 'கிரீன் ஏக்கர்ஸ்' என்ற அடுக்கு மாடி குடியிருப்பில்தான் இப்போது நான் வசிக்கிறேன்.
அதே குடியிருப்பில்தான் ஸ்ரீதேவியும், தபுவும்கூட வசிக்கிறார்கள். ஸ்ரீதேவி என் வீட்டிற்கு குழந்தைகளுடன் அடிக்கடி வந்து போவார். அதேபோல் நானும் ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று வருகிறேன்..." என்றார்.